×
 

"தவிர்க்க முடியலையா? பண்ணியே தீரணும்னா... ரூம் போடுங்க"... கோவை கூட்டு பாலியல் விவகாரம் குறித்து கஸ்தூரி சர்ச்சை பேச்சு...!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சை கிளப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.2) இரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது ஆண் நண்பருடன் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, அந்த கல்லூரி மாணவியை இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேரை திங்கட்கிழமை (நவ.3) இரவு காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.

இந்த விவகாரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆண் நண்பரை சந்தித்தது ஏன்? இரவு 11 மணிக்கு ஆண் நண்பரை சந்திக்கச் சென்றது ஏன்? என்றெல்லாம் பாதிக்கப்பட்ட மாணவி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பாம்பனில் அடுத்தது பகீர்...!! 500 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்; திடீரென கடல் நீரை உறிஞ்சிய மேகம்...!

இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றுவது போல் நடிகை கஸ்தூரி தனது பங்கிற்கு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,நானும் பதின்ம வயது பெண்ணுடைய தாய். கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வோடு இருக்கணும். வேலை கேட்ட வேலையில் ஊர் சுத்த கூடாது. அது எந்த காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது வியாபார நோக்கமாக இருக்கட்டும், இல்ல அமர காதலா இருக்கட்டும் என்ன கண்டறாவியா வேணா இருக்கட்டும். இரவு நேரத்தில் தேவை இல்லாத இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது. ஒன்றாக படிக்க வேண்டும், பேச வேண்டும் என்றால் அதுக்கு எத்தனையோ பாதுகாப்பான இடங்கள் உள்ளது. 

 ரொம்ப முடியல, உங்களால தவிர்க்கவே முடியல, பேச்சுவார்த்தை நடத்தியே தீர வேண்டும் என்றால், நீங்க ரூம் போட்டு கூட பேசிக்கோங்க. 

நான் பெண் போகக்கூடாதுன்னு சொன்னேன்னா ? ஆணுமே போகக்கூடாதுங்க, யாருமே போகக்கூடாதுங்க. நான் ஒரு பெண்ணையும் ஒரு மகனையும் பெற்ற தாயாக சொல்கிறேன். ஏனெனில் நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இது சிங்கப்பூர் கிடையாது. நம் நாடு சிங்கப்பூர் ஆகும் வரை உங்கள் பாதுகாப்பை நீங்கதான் பார்த்துக் கொள் வேண்டும் என பேசியுள்ளார்.

 

இதற்கு முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கஸ்தூரி, "இரவு 11 மணிக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பேசுவதற்கான காரணம் என்ன? பேசுவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை உடன் இருந்த ஆணும் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறான். பாதுகாப்பு இல்லாத அச்சுறுத்தல் மிகுந்த இடத்தில் அவர்கள் தனியாக சந்திக்க என்ன காரணம்" என பேசியிருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்ற தயாராகும் விஜய்... இனி தவெக மா.செ.க்களுக்கு தினம் தினம் அதிரடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share