“வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி... வஞ்சகன் மோடியடா....” - கண்ணதாசன் பாட்டு பாடி அதிமுகவை அதிரவிட்ட முத்தரசன்...!
திண்டுக்கல் திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தேர்தல் பிரச்சாரம்
எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சம்பந்தி வழக்கு முடிக்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா என கண்ணதாசன் பாட்டு பாடி அசத்திய முத்தரசன்.
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ பி செந்தில்குமாரை ஆதரித்து இன்று 15.04.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஒன்றாக நாகல்நகர் சந்தைப்பேட்டையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது மூத்த தலைவர் முத்தரசன் பேசுகையில் :- சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம். எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம். எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார்.
இதையும் படிங்க: மொதல்ல மத்திய அரசின் ஊழலை பேசுங்க அண்ணாமலை..! முத்தரசன் விளாசல்..!
சம்பந்தி வழக்கு முடிக்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா. அதிமுகவுக்கு போடக்கூடிய ஓட்டு பிஜேபிக்கு போடக்கூடிய ஓட்டாகும் அது நாட்டைக் காப்பாற்றது தமிழகத்தை காப்பாத்தாது உரிமையை காப்பாத்தாது ஆகவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
இதையும் படிங்க: “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!