அரசியல் ›

“சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”… பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்…!

சகுனிக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, அந்த சகுனிக்கும் பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது

நாங்கள் நடத்துகிறப்போர் தர்மத்தை காப்பதற்கான போர், தமிழ்நாட்டை காப்பதற்கான போர், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் வேண்டும் என்பதற்கான போர் என ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஆ -மகாராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்*.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 234 தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது,  ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுகிற போது அனைத்து தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் காப்பு தொகையை இழக்க வேண்டுமா வேண்டாமா , இழக்க வேண்டும் அது தான் முழுமையான வெற்றி அது தான் எனது வேண்டுகோள் என்றும் பேசினார்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான ஆ -மகாராஜனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார் . பிரச்சாரத்தின் போது பேசிய அவர்: மகாபாரதத்தில் வரும் சகுனி துரியோதனனோடு நட்பாக பழகுவதை போல பழகி அவன் படையையும் அளித்தான், இவன் படையையும் அழித்தான். அந்த சகுனிக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, அந்த சகுனிக்கும் பாஜகவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.அந்த சகுனி தமிழ்நாட்டை கைப்பற்ற நினைக்கிறது. அந்த சகுனியை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம் என்றார்.  

இதையும் படிங்க: உலகிலேயே நம்பர் 1!! மீண்டும் சாதித்த மோடி!! பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 2ம் ஆண்டாக முதலிடம்!

நாங்கள் நடத்துகிறப்போர் தர்மத்தை காப்பதற்கான போர், தமிழ்நாட்டை காப்பதற்கான போர், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்படும் வேண்டும் என்பதற்கான போர் என்றார். 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 234 தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களின் வெற்றியும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது,  ஆனால் இவ்வளவு பெரிய கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுகிற போது அனைத்து தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் காப்பு தொகையை இழக்க வேண்டுமா வேண்டாமா , இழக்க வேண்டும். அது தான் முழுமையான வெற்றி. அது தான் எனது வேண்டுகோள் எனக்கூறினார். 

இதையும் படிங்க: மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी