இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?... கட் அண்ட் கறாராய் முடிவை சொன்ன சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்...!
இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு? கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் எண்ணிக்கையையோ, அளவையையோ குறைக்கக் கூடாது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்றார்.
மாநில உரிமைகள், மதச்சார்பின்மை, உழைப்பாளி மக்கள் மற்றும் ஏழை, எளிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளதாகவும், இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து செல்ல முன்பணம் செலுத்தியும் சிறப்பு ரயிலுக்கு ஒன்றிய அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துவிட்டதாகவும், கேரளாவிலிருந்து இயக்கப்பட இருந்த ரயிலையும் நிறுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: டேபிள்ல ஃபைல் இருந்தா உடனே ஆக்சன் எடுங்க! முதல்வர் விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்!
இருப்பினும், பல்வேறு தடைகளைத் தாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் பல்வேறு ரயில்களில் டெல்லி சென்று பேரணியை வெற்றிகரமாக நடத்துவார்கள் .தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச பேருந்து பயணம் ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் , தமிழக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும்
தொழில் வளர்ச்சிக்கும், போக்குவரத்து வசதிக்கும் விமான நிலையம் அவசியம் என்றாலும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்களும், பொதுமக்களின் வாழ்விடங்களும் பாதிக்கப்படக் கூடாது. எனவே, மாற்று இடத்தை அரசு தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த வீரபாண்டியன், இதுகுறித்து கட்சியின் மேலிடம்தான் முடிவு செய்யும். மேலும், செங்கோட்டையன் தெரிவித்த கருத்து தொடர்பாக கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், அதுகுறித்து செங்கோட்டையனிடமே கேட்கலாம் என்றும் வீரபாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக பொருளாதாரத்திற்கு பேராபத்து... சி.எம். விஜய் முடிவுக்கு பிரபல நடிகை கடும் எதிர்ப்பு...!