101வது பிறந்தநாள் கொண்டாடும் தோழர் நல்லகண்ணு! தயவுசெய்து இத மட்டும் பண்ணாதீங்க! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரா.நல்லகண்ணுவின் 101 வது பிறந்த நாள் வரும் 26 ஆம் தேதி வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரருமான தோழர் ரா. நல்லகண்ணு அவர்களின் 101-வது பிறந்தநாள் வருகிற டிசம்பர் 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விழா குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தோழர் ரா. நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியவர். கட்சியின் கொள்கைகளை தமிழ்நாட்டில் பரப்பியதோடு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளுக்காக நீண்டகாலம் போராடியவர்.
இதையும் படிங்க: உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள தமிழ்மகன் உசைன்... நேரில் சென்று நலம் விசாரித்த EPS...!
அவரது சேவை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த பிறந்தநாளை கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தோழர் ரா. நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிக மூத்த தலைவர்களில் ஒருவர். விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியவர். கட்சியின் கொள்கைகளை தமிழ்நாட்டில் பரப்பியதோடு, தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளுக்காக நீண்டகாலம் போராடியவர்.
அவரது சேவை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது. இந்த பிறந்தநாளை கட்சி உறுப்பினர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், 101-வது பிறந்தநாளை முன்னிட்டு தோழர்கள், நண்பர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் நேரில் சென்று சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுவே அவரது உடல்நிலை விரைவில் முழுமையாக குணமடைய உதவும் உண்மையான வாழ்த்தாக அமையும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே வாழ்த்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோழர் ரா. நல்லகண்ணுவின் நீண்ட ஆயுளும், அவரது போராட்ட வரலாறும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினருக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அவரது உடல்நிலை விரைவில் முழுமையாக தேறி, மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபட வாழ்த்துகள்!
இதையும் படிங்க: அதிமுக - பாஜ கூட்டணியில் டிடிவி ? அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு! மவுனம் கலைத்தார் தினகரன்!?