அதிமுக - பாஜ கூட்டணியில் டிடிவி ? அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு! மவுனம் கலைத்தார் தினகரன்!?
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு கூட்டணி குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது கட்சி யாருடைய அழுத்தத்துக்கும் செவி சாய்க்காது என்று உறுதியாக கூறினார். பல்வேறு கட்சிகள் அமமுகவை அணுகி கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும், ஆனால் எந்த கூட்டணியில் இணைய வேண்டும் என்பதை அமமுகவே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் பேசுகையில், ஆண்டிபட்டி தொகுதியில் எந்த கூட்டணியில் இருந்தாலும் அமமுக வேட்பாளரே போட்டியிடுவார் என்று கண்டிப்பாக கூறினார். அமமுகவை தவிர்த்துவிட்டு யாராலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளடி வேலை கண்டிப்பா நடக்கும்?! தேஜ கூட்டணியில் இணைய ஓபிஎஸ், டிடிவி தயக்கம்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்ற செய்தி வெறும் வதந்தி என்று மறுத்தார். கூட்டணியே இன்னும் உறுதியாகாத நிலையில் தொகுதி பங்கீடு பற்றி பேசுவது தவறு என்று கூறினார்.
தமிழ்நாட்டில் அமமுக தற்போது தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்த டிடிவி தினகரன், கட்சியின் அமைப்பு வலுவாக உள்ளதாகவும், சுயநலத்துக்கு விலை போகாத நிர்வாகிகள் உள்ளதாகவும் புகழ்ந்தார். தை மாதம் பிறந்த பிறகு, ஜெயலலிதா பிறந்தநாளை (பிப்ரவரி 24) தொடர்ந்து கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
மக்கள் நலனை முதன்மையாக கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று உறுதியளித்தார். எங்களை ஏற்றுக்கொள்வது தேவையில்லை, நாங்கள் யாரை ஏற்றுக்கொள்வோம் என்பதே முக்கியம் என்று காய் நகர்த்துவது போல கூறினார்.
அமமுகவின் இந்த நிலைப்பாடு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அமமுகவின் முடிவு பல கட்சிகளின் கூட்டணி உத்தியை பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: தவெக கூட்டணியில் அமமுக?! தமிழகத்தில் 4முனை போட்டி தான்!! டிடிவி ஓபன் டாக்!