அதிமுகவுக்கு வாய்ப்பளித்தால்..! முதல்வர் விஜய்க்கு செக்... சிபிஎம் சண்முகம் எச்சரிக்கை..!
அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளித்தால் தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என சிபிஎம் சண்முகம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசை அமைத்தது. மே 10, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
முதல்வராக ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சர்கள் ஆனது இதுவே முதல் முறை என்றும் இது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில், அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பளித்தால் தங்கள் ஆதரவை நிச்சயம் மறுபரிசீலனை செய்வோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேயர் பிரியாவுக்கு காலில் காயம்..? சைலண்ட் மோடில் DMK கவுன்சிலர்கள்..! "பனிப்போர்"..!!
ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மத்திய அரசின் உத்தரவுப்படி வந்தே மாதரம் தான் முதலில் பாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் கூறியதாக சண்முகம் தெரிவித்துள்ளார் தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படுவது குறித்து முதல்வரிடம் கேட்டபோது அவர் இந்த பதிலை தான் கூறினார் எனவும் தெரிவித்துள்ளார். விளிம்பு நிலை மக்களுக்காக களமாடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம்பெற முடிவு செய்தால் அதை வரவேற்க தான் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கட்சியில் மட்டும்தான் தமிழகம்..! ஆட்சி முழுவதும் சங்கித்தனம்... திமுக விளாசல்..!