சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்ததாக மார்க்சஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். வரும் தேர்தல்களை கூட்டணியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். கூட்டணியை உருவாக்கும் நோக்கத்தில் கூட்டப்படும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார். வெளியில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு என்பது தொடரும் என்றும் கூறினார்.
ஆனால் நாளை நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்க மட்டும் எனவும் தெரிவித்தார். கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களை அப்புறப்படுத்த கூடாது என்று வலியுறுத்தினார். சட்டமன்றம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மன்றமாக நடக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆளுங்கட்சி என்ற முறையில் தமிழக வெற்றி கழகத்திற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது என்று தெரிவித்த சண்முகம், சட்டமன்றம் மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது என்றும் அவர்களின் சொந்த பணத்தில் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு கேள்விக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தாரா என்று கேட்டுள்ள சண்முகம், பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் நேரலையில் பார்க்கிறார்கள் எனவும் கூறினார். தமிழக வெற்றி கழகத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் 5 வருட ஆதரவு தொடர வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாட்டை பொறுத்தது என்று கூறிய அவர், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்ற வகையில் சட்டமன்றத்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!
மிசா குறித்து அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு அறியாமையின் வெளிப்பாடு என்றும் சட்ட மன்றம் சண்டை மன்றம் ஆகவும் கத்துவதற்கான மன்றமாகவும் நடைபெறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சண்முகம், சேற்றை வாரி வீசுவதை போன்று அமைச்சர்கள் பேசக்கூடாது என்றும் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் ஒன்றுக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். வரலாறு தெரியாது திமுகவின் மீது இருக்கும் வெறுப்பில் சகட்டுமேனிக்கு பேசுவது தவறு என்றும் அமைச்சர் நிர்மல் குமாருக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் மூன்று கோப்புகள் மேஜையில் இருப்பதாக கூறும் முதல்வர் ஏன் 50 ஆண்டுகள் முன் உள்ளவற்றை கிளறுகிறார் என்றும் தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் முதலில் நிறைய படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுத்த வேஸ்ட்... பதிலுரையில் பதிலே இல்லையே?... சி.எம்.விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம் சண்முகம்...!