×
 

விடிந்ததுமே சி.விஜய்க்கு செம்ம ஷாக் கொடுத்த சிபிஎம்... தவெகவை அடித்து துவைத்த பெ.சண்முகம்...!

கல்லூரிக் கல்வி ஆணையர் அவர்கள் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கை, அரசியல் தளத்திலும் பல்வேறு மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குறித்து குஜிலியம்பாறை வட்டாட்சியர் கணக்கெடுப்பு நடத்த சொன்ன கடிதம் தொடர்பாகவும், மாணவர்கள் இடது சாரி இயக்கங்களின் போராட்டங்களில் பங்கேற்கக்கூடாது என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று காலை அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அனைவருக்கும் வணக்கம். இன்று ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் பரவலாக விவாதம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கல்லூரிக் கல்வி ஆணையர் அவர்கள் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய ஒரு சுற்றறிக்கை, அரசியல் தளத்திலும் பல்வேறு மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதில் குறிப்பாக, இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள், அதேபோல் பாரதிய ஜனதா கட்சி நடத்தக்கூடிய போராட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம், காவல்துறை ஆகியோர் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் இத்தகைய விவாதத்துக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

இன்றைக்கு போராட்டத்திற்குச் செல்லக்கூடிய மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற முறையில், தமிழ்நாடு அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாகத்தான் இத்தகைய ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது சம்பந்தமாக விவாதம் நடைபெற்றபோது, பொருத்தமில்லாத சில வார்த்தைகள் அதில் இடம்பெற்றுவிட்டதாகவும், தேவையற்ற சில வார்த்தைகள் இடம்பெற்றுவிட்டதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது என்பது கடுகளவும் ஏற்க முடியாத ஒரு விஷயம்.

எத்தனையோ ஆண்டுகளாக பாஜகவினுடைய மாணவர் அமைப்பு இருக்கிறது, திமுக மாணவர் அமைப்பு இருக்கிறது, அதிமுக மாணவர் அமைப்பு இருக்கிறது. அதேபோல் மாணவர் காங்கிரஸ் என்ற மாணவர் அமைப்பும் இருக்கிறது. இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், இடதுசாரி மாணவர் அமைப்பு மட்டும்தான் இந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது மாதிரியாக, அவர்களைக் கண்காணிக்க வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்று குறிப்பிடுவது என்பது தேவையற்ற வார்த்தைகள் தெரியாமல் வந்துவிட்டன என்று அமைச்சர் சமாளிப்பது என்பது ஏற்க முடியாத ஒரு வாதம்.

இது நோக்கப்பூர்வமாகவே இடதுசாரிகளை ஒடுக்க வேண்டும், இடதுசாரி கருத்துகளைக் கொண்ட மாணவர்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.

இத்தகைய ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில்தான் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஆனால், சுற்றறிக்கை வெளியிடப்பட்டு பல நாட்கள், கூட்டம் நடந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இது நிச்சயமாக அரசு ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

காவல்துறை, கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் ஆகிய அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இதற்கெல்லாம் மிகவும் அக்கறையுடன் செயல்படக்கூடிய நீங்கள், தமிழ்நாட்டில் இப்படி ஒருங்கிணைந்து தீர்க்கப்பட வேண்டிய, தலையிட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் இத்தகைய ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

ஆகவே, இது தெரியாமல் நடந்தது, ஒரு தவறு நடந்துவிட்டது என்ற முறையில் எடுத்துக்கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிலைமையை நாம் ஏற்க முடியாது.

இதற்குக் காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இதே காலகட்டத்தில்தான் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வட்டாட்சியராக இருந்த ஒரு வட்டாட்சியர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களையும், முகவரிகளையும் ஒரு நாளுக்குள் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பிக்கிறார்.

என்ன அப்படி தலைபோகிற அவசரம் என்று நான் கேட்க விரும்புகிறேன். இரண்டாவது, இவருக்கு அப்படிப்பட்ட அதிகாரம் எல்லாம் இருக்கிறதா? ஒரு கட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதற்கான விவரங்களையெல்லாம் சேகரிப்பதற்கான அதிகாரம் ஏதாவது அவருக்கு இருக்கிறதா?

அல்லது சிபிஐயோ, சிபிஎம்மோ தடை செய்யப்பட்ட இயக்கங்களா? சட்டவிரோதமான கட்சிகளா? எந்த அடிப்படையில் அவர் இந்த மாதிரியான ஒரு சுற்றறிக்கையை முதலில் வெளியிடுகிறார்?

அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, குறிப்பாணையை நாங்கள் விலக்கிக்கொண்டோம், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார், ஆகவே அந்தப் பிரச்சினையை அத்தோடு முடிப்போம் என்று அரசு தரப்பில் இருந்து சொல்வதெல்லாம் ஏற்கத்தக்க விஷயம் அல்ல.

அவர் இப்படிப்பட்ட ஒரு குறிப்பாணையை வெளியிடுகிறார் என்றால், அதன் விளைவுகள் தெரியாமல் ஒரு வட்டாட்சியர் வெளியிட்டார் என்பதெல்லாம் ஏற்க முடியாது.

இப்படி ஒரு தேசிய கட்சியை, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியைப் பற்றி, அதனுடைய உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களைச் சேகரிப்பது என்ற சட்டவிரோதமான நடவடிக்கைக்கு உத்தரவு வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இடமாற்றத்தை ஒரு தண்டனையாக ஏற்க முடியாது.

இதையும் படிங்க: “கர்நாடக முதல்வரை சந்தித்து என்ன செய்ய போறீங்க..?” - சி.எம்.விஜய்க்கு சிபிஎம் சண்முகம் அட்வைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share