×
 

“விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு... இனி பாஜக, NDA கூட்டணி கிடையாது” - இபிஎஸுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்த சி.வி.சண்முகம்...!

மக்கள் தீர்ப்பை ஏற்று தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவிக்கிறோம் என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.சண்முகம் தெரிவித்ததாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி தோல்வியடைந்ததை முழுமையாக ஒப்புக்கொள்கிறோம். அதிமுக காப்பாற்ற பட வேண்டும். நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்.ஜி.ஆர். ஜெயலலித ஆட்சி வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் உள்ளோம். விஜய் முதலமைச்சராக வாக்களித்துள்ள மக்களின் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார். நாங்கள் இதுவரை திமுகவை எதிர்த்து அரசியல் செய்தோம். எந்த திமுகவை எதிர்த்து அரசியல் செய்தோமோ, அந்த திமுக ஆதரவுடன் நான் முதலமைச்சராக ஆதரவளிக்க வேண்டும் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இது தவறு என்று நாங்கள் சொன்னோம். அதை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை.

இதனால் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கலந்தாலோசித்தோம். சில தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளோம். 
தற்பொழுது அதிமுக தேர்தலுக்கு  முன்பு அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவிக்கிறோம் என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளோம். 

இதையும் படிங்க: “திமுகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் விரும்பினார்...” - உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...!

அதிமுக சட்டமன்ற குழுவாக எஸ் பி வேலுமணி அவர்களை தேர்வு செய்துள்ளோம். அதிமுக கொறடாவா விஜயகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை முறைப்படி சபாநாயகரிடம் கடிதமாக கொடுத்துள்ளோம். இதுவே அதிமுக பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவு. அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஏற்பட்ட முறையில் யார் மீது குற்றம் சுமத்தவில்லை. இந்த தோல்வி அனைவருக்குமானது  எனக்கூறினார். 

தோல்வி குறித்து ஆராய உடனடியாக அதிமுக பொது குழுவை கூட்ட வேண்டுகோள் விடுகிறோம். பொதுச் செயலாளர் உடனடியாக விரைந்து பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என்றார். 

இதையும் படிங்க: என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share