×
 

இந்தியாவுக்கு எதிராக பாக்., சதி!! ஜார்ஜ் புஷ்ஷிடம் புதின் பேசிய ரகசியம்! 24 ஆண்டுகளுக்குப் பின் வெளி வந்த உண்மை சம்பவம்!

அணு ஆயுதங்களை வைத்து பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்து வருவதாக, கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம், ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டியது, 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வாஷிங்டன்: கடந்த 2001ஆம் ஆண்டு ஸ்லோவேனியாவில் நடந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பின் உரையாடல் விவரங்கள், 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்காவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு காப்பகம் (National Security Archive) இந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து புடின் தீவிர கவலை தெரிவித்தார். அப்போதைய பாகிஸ்தான் ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் தலைமையிலான ஆட்சியை "அணு ஆயுதங்கள் கொண்ட ராணுவ ஆட்சி" என்று கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய விரும்பிய பாக்., பெண்!! வரதட்சணையாக வாஜ்பாய் கேட்டது இதைத்தான்! ராஜ்நாத்சிங் தகவல்!

புடின் புஷ்ஷிடம் கூறியதாவது: "நான் பாகிஸ்தானைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். அங்கு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. அது மக்களாட்சி அல்ல. மேற்கு நாடுகள் இதை கண்டிக்கவில்லை. இது குறித்து நாம் பேச வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்று கூறினார். அதற்கு புடின், "எனக்குத் தெரியும். நான் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்தலாக பார்த்ததில்லை. போர் காலத்திலும் கூட சீனாவையும், 50 ஆண்டுகால எதிர்காலத்தையும் நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம்" என்று பதிலளித்தார்.

பாகிஸ்தான் சட்டவிரோத வழியில் அணு ஆயுதங்களைப் பெற்று, பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்தியா நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறது. 2001இல் புடின் தெரிவித்த கருத்துகள், இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்போது பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்து வந்த நிலையில், மேற்கு நாடுகள் அதை விமர்சிக்காமல் இருந்ததையும் புடின் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த ரகசிய உரையாடல் வெளியானது, தற்போதைய உலக அரசியல் சூழலில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைன் - ரஷ்யா போரின் இறுதிக்கட்டம்! வரவிருக்கும் வாரங்கள் மிக முக்கியம்!! ஜெலன்ஸ்கி சூசகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share