ஸ்தம்பித்தது தலைநகரம்... கொட்டும் மழையிலும் விட்டுக்கொடுக்காத ’கரப்பான் பூச்சிகள்’... திணறும் போலீஸ் படை...!
கடந்த பல நாட்களாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த பல நாட்களாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் போராட்டத்தை கலைத்தனர்.
இதையடுத்து, இன்றும் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். நேற்றே இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், மத்திய ராணுவப்படை, துணை ராணுவப்படை மற்றும் டெல்லி காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு தலைநகர் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மேகதாது பிரச்சனை... குரல் கொடுக்கும் திமுக... நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ்..!!
நேற்று நடைபெற்ற பேரணியின் போது நடந்த தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீச்சைத் தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், பேரணியின் போது ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறையில் உயர் அதிகாரிகள் உட்பட 118 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்றும் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தை முன்னிட்டு, இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மறுபுறம், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்றும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற வன்முறை மற்றும் தடியடியில் 118 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும், 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'இது கல்வி வரலாற்றில் மைல்கல்'... புது முயற்சி.! அமைச்சர் ராஜ்மோகனை பாராட்டிய சீனு ராமசாமி..!