செஞ்ச ஊழல் கொஞ்சமா? நஞ்சமா? டெல்லியை சீரழித்த ஆம் ஆத்மி?! கெஜ்ரிவாலை விளாசும் முதல்வர் ரேகா குப்தா!!
நேர்மையானவர், நேர்மையாவனர் என பேசும் கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் செய்யாத குற்றம் தான் என்ன? நீங்கள் ஊழல் செய்யாத துறைகள் தான் ஏது? என டெல்லி முதல்வர் ரேகா குப்தா கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லி ஆம் ஆத்மி அரசு கொண்டுவந்த மதுபான கொள்கையில் பெரும் ஊழல் நடந்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்று அமலாக்கத்துறையும் ED வழக்கு பதிவு செய்தது. இதனால் அப்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்றார். பின்னர் பதவியை ராஜினாமா செய்தார். மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சி பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இந்நிலையில், ரோஸ் அவென்யூ கோர்ட் வழக்கை விசாரித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனால் ஆம் ஆத்மி தலைவர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கெஜ்ரிவால் "எங்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை. இது பாஜகவின் திட்டமிட்ட சதி. நாங்கள் நேர்மையானவர்கள்" என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதற்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா (பாஜக) கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். "நேர்மையானவர் என்று பேசும் கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் செய்யாத குற்றம் என்ன? ஊழல் செய்யாத துறை எது?" என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி, சோனியா காந்தி ஜெயிலுக்கு போனாங்களா? வாய்க்கு வந்ததை பேசாதீங்க! கொந்தளிக்கும் கெஜ்ரிவால்!
மேலும், "மதுபான கொள்கையில் முறைகேடு இல்லை என்றால், வழக்கு பதிவான உடனேயே அதை திரும்பப் பெற்றது ஏன்? ஒரு பாட்டில் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு சரியா? மது விற்பனையை தனியார்மயமாக்கி கமிஷன் உயர்த்தி கொள்ளை அடிக்க முயன்றது எப்படி நியாயம்?" என்று கேள்விகளை அடுக்கினார்.
"உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் கூட இந்த கொள்கை குறித்து கவலை தெரிவித்ததை மறக்க முடியுமா? நீங்கள் ஊழல் செய்யவில்லை என்றால், டெல்லியில் ஏன் இத்தனை திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன?" என்றும் கேட்டார்.
ரேகா குப்தா தொடர்ந்து, "கண்ணாடி மாளிகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, ஏழைகளின் தோழன் என்று சொன்னீர்கள். 42 இன்ச் சட்டைக்கு பொருத்தமான உங்களுக்கு 44 இன்ச் சட்டை போட்டு எளிமையானவன் போல் வேஷம் போடுகிறீர்கள். பிரைவேட் ஜெட்டில் பயணித்து, பஞ்சாப் கண்ணாடி மாளிகையில் வசிக்கிறீர்கள்.
வகுப்பறை கட்டுவதில் ஊழல், மக்கள் நலத்திட்டங்களில் ஊழல்... மக்கள் பணத்தை கொள்ளையடித்தீர்கள். அதற்குத்தான் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டினார்கள். ஆனால் இன்னும் நல்லவர் போல் வேஷம் போடுகிறீர்கள். மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும்" என்று கடுமையாக சாடினார்.
இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் டெல்லி அரசியலை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளன. ஆம் ஆத்மி vs பாஜக மோதல் இனி தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு!! பாஜக வெட்கப்படணும்!! கெஜ்ரிவால், சிசோடியாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்!