×
 

“நாகூர் ஹனிபாவின் குரல் காற்றில் கலந்திருக்கும் வரை”... பாஜகவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உதயநிதி ஸ்டாலின்...!

இந்த மண்ணில் திராவிட இயக்கம், இசுலாமிய நெறி உள்ள வரைக்கும் நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும்.

நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக நாகூர் சில்லடி தர்காவின் எதிரே 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இசை முரசு  நாகூர் E.M.ஹனிபா பெயரில் பூங்காவை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கிறது. இந்த பெயரையும் தமிழக முதல்வர்தான் காப்பாற்றி வருகிறார். நாகை மாவட்டத்திற்கு வருவது எனது சொந்த ஊருக்கு, சொந்த வீட்டிற்கு வருவதுபோல உள்ளது. இந்தியாவிற்கு முன் மாதிரியான மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலர் ஆலயம் உள்ளது. சாதி மதம் பார்க்காத மண் நாகை மண். சென்னையில் ஹஜ் இல்ல அடிக்கல் நாட்டுவிழாவில் மூன்று நாட்களுக்கு முன்பு சென்னையில் பங்கேற்றேன். இன்று நாகூர் ஹனிபா நிகழ்வில் பங்கேற்கிறேன்.வருகின்ற 24 ஆம் தேதி சென்னையில் இசைமுரசு நாகூர் ஹனிபா புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்றார். கலைஞர் மற்றும் நாகூர் ஹனிபா ஆகிய இருவருக்கும் இரண்டு வயசுதான் வித்தியாசம். 75 ஆண்டுகளாக இரண்டு குரல்கள்தான் திமுக மேடையில் உச்சரிக்கும் . இன்று கலைஞர் குரல், மற்றொன்று ஹனிபா குரல். இரண்டுமே கொள்கை குரல்

இதையும் படிங்க: “ஸ்டாலினோட அடுத்த அமைச்சரவை கூட்டமே ஜெயில் தான் நடக்கும்...” - திமுகவிற்கு பகிரங்க சவால் விட்ட தமிழிசை சவுந்தரராஜன்...!

கடந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு ஹனிபா நூற்றாண்டு விழா. மேலும், பெரியார், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் நூற்றாண்டு விழாவை திராவிட மாடல் அரசு நடத்தியுள்ளது. இசை முரசுவின் தந்தை முகமது இஸ்மாயில் மலேசியா ரயில்வேயில் பணி செய்து வந்த நிலையில், நாகூர் ஹனிபா 15 வயதில் தமிழகத்தில் வரும் தினசரி நாளிதழ்களின் துணுக்குகளை தந்தைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தார்

பெரியாரின் குடியரசு பத்திரிகையை நாகூர் ஹனிபா படித்தார். அதோடு நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலைஞர் திருவாரூரில், நாகூரில் ஹனுபாவும் பேரணி நடத்தினர். மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே மக்களின் வரிப் பணம் 2000 கோடி ரூபாயை விடுவிப்போம் என ஒன்றிய அரசு மிரட்டுகிறது. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க ஒன்றிய அரசு துடிக்கிறது. நாகூர் ஹனிபாவின் காலடி சுவடுகள் இந்த மண்ணில் இருக்கும் வரையில், அவருடைய குரல் காற்றில் கலந்துள்ள வரைக்கும் தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை பாஜக அரசு செய்யமுடியாது.

ஹீரோக்களுக்கு பில்டப் கொடுக்க வேண்டுமென்றால், BGM மற்றும் வீடியோ எடிட்டிங் தற்போது தேவைப்படுகிறது. வக்பு வாரியத்தில் தலைவராக பொறுப்பேற்று இசுலாமிய மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்தவர் நாகூர் ஹனிபா. நாகூர் தைக்கால் தெருவிற்கு இசைமுரசு நாகூர் ஹனிபாவிற்கு என்றும், சில்லடியில் நாகூர் ஹனிபா பூங்காவும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த மண்ணில் திராவிட இயக்கம், இசுலாமிய நெறி உள்ள வரைக்கும் நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும். அவர்போல தமிழ்நாட்டையும் மத நல்லிணக்க மாநிலமாக நாம் வைத்திருக்க வேண்டும். திமுக அரசு அமைந்தால் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சிறுபான்மை நல ஆணையம், உலகமாக்கள் ஓய்வூதியம், வக்பு சொத்துகளை பராமரிக்க மானியம், உறுதி பயிற்சி பள்ளி, பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு, உலகமாக்கள் பணியாளர்கள் , கல்வி உதவி தொகை,  சிறுபான்மை கல்லூரி மாணவர் விடுதி, அரசு சார்பாக நாகூர் சந்தனக்கூடு விழாவிற்கு 45 கிலோ சந்தன கட்டைகள் வழங்கியது போன்று திட்டங்கள் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு இசுலாமியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக்கூறினார். 
 

இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share