அசம்பிள் பீஸ், டெல்லி மேட்... “சும்மா கிழி” - அதிமுக கூட்டணியை கலாய்த்து தள்ளிய உதயநிதி...!
மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
ஈரோட்டில் திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஈரோடு அருகே, மேட்டுக்கடை தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஈரோடு, நாமக்கல் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: கலைஞர், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி அவரிடம் பாடம் கற்றார். இத்தகைய சிறப்பான இடத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி.
தேர்தல் அறிவித்த பிறகு தற்போது உங்களை சந்திக்கிறேன்.இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதில் என்ன செய்யவேண்டும் என்பதை ஆலோசனை செய்ய இந்த கூட்டம். நாடாளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் பணியால் நூறு விழுக்காடு வெற்றி பெற்றோம்.இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் நூறு விழுக்காடு வெற்றி பெறவேண்டும்.
இதையும் படிங்க: “மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!
ஈரோடு நாமக்கல் நிர்வாகிகளை சந்திக்கும்போது எனது மகிழ்ச்சி இரட்டிப்பாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக இருக்கவேண்டும். தமிழகத்தை காக்கும் ராணுவ வீரர்களாக இளைஞரணி உள்ளது. பாசிச சக்திகள் கருப்பு சிவப்பு இளைஞர் படை இருக்கும்வரை உள்ளே வரமுடியாது.
மகளிர் விடியல் பயணம்,காலை உணவு திட்டம்,அன்பு கரங்கள் திட்டம், தமிழ்புதல்வன், லேப்டாப் திட்டம், 300 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி,1 .32 கோடி மகளிருக்கு உதவித்தொகை திட்டம், தாயுமானவர் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
மகளிர் உரிமை திட்டத்தை நிறுத்த சங்கி கூட்டம் முயற்சித்தது.ஆனால் முதல்வர் ஐந்தாயிரம் கொடுத்தார்.மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாயிரமாக உயர்த்தி தரப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழகத்தின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. கல்வி நிதியை பறித்தனர்.புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்பேன் என்றனர்.மீண்டும் சமஸ்கிருதமும் இந்தியை திணிக்கும் திட்டம் தான் புதியக்கல்வி கொள்கை.
அடிமையை பிடித்து தமிழகத்தில் நுழைய மோடியும் அமித்ஷாவும் முயற்சிக்கின்றனர்.இவர்களின் விளையாட்டு வட நாட்டில் எடுபடும் தமிழகத்தில் எடுபடாது.
*பத்து தோல்வி பழனிச்சாமி படுதோல்வி பழனிச்சாமியாக போகிறார்.முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் அசம்பிள் (Assemble) பீசாக டெல்லி மேடாக (Made).ஆக அதிமுக கூட்டணி உள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தேர்தலும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியை மக்கள் நம்புகின்றனர். பாஜகவின் ஏ,பி,சி டீம் இறங்கிவிட்டனர்.ஆனால் தமிழகத்தில் சேம்பியனாக திமுக தான் உள்ளது.
இதையும் படிங்க: “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!