×
 

“மக்கள் முகத்தில் மகிழ்ச்சி... திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி...” - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்...!

மகளிர் சுய உதவிக் குழுவினர் சாதனை படைத்து வருவதாக  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்,  இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கலந்து கொண்டு 421 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 33 முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கு  திறந்துவைத்தார்.

 மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 29,000 பயனாளிகளுக்கு, 304 கோடி மதிப்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கி, உரையாற்றினார். அவர் பேசிய அவர், கலைஞர், முதல்வருக்கு நெருக்கமான மாவட்டம் தருமபுரி. ஒவ்வொரு பயனாளிகளின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. இதுதான் திராவிட மாடல் ஆடாசிக்கு சாட்சி. இது தொடர வேண்டும் என்பதுதான் வருகிற தேர்தல்.  திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் திட்டங்களை நமது முதலமைச்சர் கொடுத்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகையை தேர்தலை காரணம் காட்டி நிறுத்த முயற்சித்தனர். ஆனால் முன்கூட்டியே மூன்று மாதம் பணம் மற்றும் கோடைக்கு 2,000 என மொத்தம்  5000 ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: “டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!

இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் 11.19 சதவீத வளர்ச்சிப் பெற்று தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.  தமிழ்நாடு அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் திராவிட மாடல் 2.0 வில் தொடர்ந்தும், புதிய பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கு தருமபுரி தான் தாய் வீடு. மகளிர் குழுவினர் சாதனை படைத்து வருகின்றனர். ஐடி நிறுவனம் போல  மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திராவிட மாடல் 2.0  ஆட்சியில் இன்னும் பல திட்டங்களை முதல்வர் கொடுப்பார் என உறுதி கூறுகிறேன்.

மாற்றுத் திறனாளிகள், மாற்றத்திற்கான திறனாளிகளாக வளர்ந்து வருகிறீர்கள். உங்களுக்கு ஒருவர் குரல் கொடுக்க வேண்டும் என்றில்லாமல், மற்றவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கலாம் என்பதற்காக, உள்ளாட்சியில் பிரதிநிதிகளாக நேரடியாக நியமனம் செய்ய  தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்தார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share