ரகசிய கல்லாப்பெட்டி?... சண்முகப்பிரியா வீட்டில் சிக்கியது முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள்... அன்பில் மகேஷ் வழக்கில் அதிரடி திருப்பம்...!
இந்தச் சோதனையின்போது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சென்னை பெருங்குடியில் உள்ள சண்முகப்பிரியா என்பவரின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கெனவே அரசகுமார், சுரேஷ் ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 9 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பென்டிரைவ்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுடன் 118 டிஜிட்டல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அறிவாலயத்தை அதிரவிட்ட தவெக... முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப்பதிவு... காரணம் என்ன?
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரசகுமாரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர் அளித்த வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெருங்குடியில் நடைபெற்ற சோதனையின்போது பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களையும், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து வருவதாகவும், பணமோசடி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING புழல் சிறையில் அன்பில் மகேஷ்... உள்ளே இறங்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.. மொத்தமாக `முடக்க' திட்டம்...!