×
 

கூட்டணி கட்சியினரை சந்திக்க தேமுதிக நிர்வாகிகளுக்கு தடை! கடிவாளம் போட்ட பிரேமலதா! திமுக ஷாக்!!

தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் உறுதியானதும் அறிவிக்கப்படும். அதுவரை தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கக் கூடாது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. (DMDK) திடீரென இணைந்துள்ளது. இது கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்து வரும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) போன்றவற்றுக்கு தொகுதி பங்கீட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க.வுக்கு 6-10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் இடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

தே.மு.தி.க. தலைமை, கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் வென்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் போன்ற வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டுமே கேட்டுள்ளது. கட்சி செல்வாக்கை மீட்டெடுக்க, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெல்ல திட்டமிட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்கள் குறித்து சாதக-பாதகங்களை தலைமை விசாரித்து வருகிறது.

சமீபத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அங்கு கட்சியின் செல்வாக்கு மற்றும் விஜயகாந்தின் தனிப்பட்ட பலம் குறித்து விசாரித்தார். கட்சியினர் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்! பறி போகிறது பழைய கட்சிகளின் சீட்! தலை சொறியும் தலைமை!

ஆனால், தொகுதிகள் உறுதியாகும் வரை தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை யாரும் சந்திக்கக் கூடாது என பிரேமலதா கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

தலைமையிடமிருந்து முறையான அறிவிப்பு வரும்போது மட்டுமே கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கலாம். அதுவரை தனியே சந்திப்பது தவறு என கறாராக கூறி அனுப்பியுள்ளார். இதனால், "நாங்களே சீனியர்கள்" எனக் கூறி தி.மு.க. முக்கிய புள்ளிகளை சந்திக்கும் சில நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என தே.மு.தி.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய பிரபாகரன் (இளைஞரணி செயலர்) சொந்த தொழிலில் ஈடுபட்டதால் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிகிறது. விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் – எந்த தொகுதியில் பிரேமலதா களமிறங்குவார் என்பது இன்னும் யூகமாகவே உள்ளது.

தே.மு.தி.க. இணைப்பு தி.மு.க. கூட்டணிக்கு பலம்தான். ஆனால், தொகுதி பங்கீட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூடுதல் இடம் கேட்கும் நிலையில், புதிய கூட்டாளி வருகை சவாலாக உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி ஒற்றுமை முக்கியம். பிரேமலதாவின் இந்த உத்தரவு, கட்சி ஒழுக்கத்தை வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது. 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது!

இதையும் படிங்க: தேமுதிக-வை வைத்து காங்கிரஸுக்கு செக்! திமுக மாஸ்! அரசியல் சதுரங்கங்கத்தில் கச்சிதமாய் காய் நகர்த்தும் மு.க.ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share