"இந்த முறை உறுதியா அது நடக்கும்...." - தேமுதிகவினருக்கு நம்பிக்கை கொடுத்த பிரேமலா விஜயகாந்த்...!
இந்த முறை உறுதியாக நீங்கள் விரும்பும், தமிழக மக்கள் விரும்பும் கூட்டணி தான் அமைப்போம்.
இந்த முறை உறுதியாக நீங்கள் விரும்பும், மக்கள் விரும்பும் கூட்டணி தான் அமைப்போம் - மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் - S.I.R என்று வாக்குத் திருட்டு நடப்பதாக செய்தி. அதனால் உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள் - உள்ளம் தேடி, இல்லம் நாடி வேடசந்தூர் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தே.மு.தி.க சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் கலந்து கொண்டனர்.
அப்போது பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசியதாவது:-உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். இந்த முறை உறுதியாக நீங்கள் விரும்பும், தமிழக மக்கள் விரும்பும் கூட்டணி தான் அமைப்போம்.
இதையும் படிங்க: மீண்டும் தேமுதிக -அதிமுக கூட்டணி? பிரேமலதாவுடன் அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...!
உங்கள் கருத்துக்களை கேட்டு, கட்சி தொண்டர்களும் தமிழக மக்களும் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க அமைக்கும்.
உறுதியாக நல்ல நேரம் வரும்போது அதற்கான அறிவிப்பு உங்களுக்கு வரும். நீங்கள் பெருமைப்படும் அளவிற்கு, மகழ்ச்சி அடையக்கூடிய அளவிற்கு தான் கூட்டணி அமையும்.
மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் எனமத்திய மாநில அரசுகளை தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
S.I.R என்று உங்கள் வாக்குத் திருடப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. அதனால் ஒவ்வொரு தனிநபரும் சென்று உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள்.
நமது வாக்கை உறுதி செய்து விட்டால், அதை திருடும் உரிமை இந்த ஜென்மத்தில் உலகத்தில் எவனுக்கும் கிடையாது. இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் நமது ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை என்று பேசினார்.
இதையும் படிங்க: "15 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கு"... போடிக்கே போய் ஓபிஎஸை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்...!