×
 

"நேற்று முளைத்த காளான்கள்..." - விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா விஜயகாந்த்...!

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா ஆரூடம்

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா ஆரூடம். வெற்றி கூட்டணி அமைப்போம் தொண்டர்களிடம் பிரேமலதா உறுதி. வாக்கு திருட வருகிறார்கள் உங்கள் வாக்குகளையும் குடும்பத்தினரின் வாக்குகளையும் உறுதி செய்து கொள்ளுங்கள் தொண்டர்களுக்கு பிரேமலதா வேண்டுகோள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் மக்களை தேடி மக்கள் தலைவர் நிகழ்ச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெரியார் சிலை பகுதியில் இருந்து ரோட் ஷோ வாக அழைத்து வரப்பட்டார்.

பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா, காரைக்குடி பகுதி விருந்தோம்பலில் சிறந்தவர்கள். படப்பிடிப்பு மற்றும் கட்சி நிகழ்சிகளுக்கு தலைவர் விஜயகாந்துடன் பல முறை வந்துள்ளேன்.

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..!

வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைப்போம். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

2026 தேர்தல் இதுவரை இல்லாத வகையில் கூட்டணி ஆட்சியாக கூட்டணியில் பங்கு பெறும். அனைவரும் ஆட்சியில் பங்கு கொள்ளும் வகையில் இருக்கும்.

SIR திருத்தத்தில் உங்கள் வாக்குகளை உறுதிபடுத்தி கொள்ளுங்கள். பல்வேறு திருட்டுக்களை போல வாக்குகளை திருட வருகிறார்கள். உங்கள் வாக்குகள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரின் வாக்குகளையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஜனவரி 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது எனக் கூறிய  பிரேமலதா, காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவோம் என்றார். மாநகராட்சி ஆகிவிட்டது என்று ஒரு தொண்டர் கூற கட்டமைப்பை மேம்படுத்துவோம் என சமாளித்தார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், மற்ற கட்சியினர் எல்லாம் கூட்டத்தைக் கூட்ட லாரி கொண்டு வந்து பிரியாணி பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவதாகவும், அங்குள்ள கூட்டம் தானாக கூடிய கூட்டம் என்றும் தெரிவித்தார். தேமுதிக 20 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருப்பதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் நேற்று முளைத்த காளான்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை. தேமுதிக 20 ஆண்டு வருடம் ஆலமரம் எனக்கூறினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த கருத்து தவெகவை மறைமுகமாக சாப்பிடுவதாக சோசியல் மீடியாக்களில் விவாதம் வெடித்துள்ளது.

இதையும் படிங்க: "ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்..." - சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்... தவெ மா.செ.க்களுக்கு ஆப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share