கேப்டன் வீட்டில் சோகம்.. கதறி அழும் பிரேமலதா விஜயகாந்த்..!! தேற்றும் மகன்கள்..!!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்புகின்றனர். அவரது மறைவு தேமுதிக கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் களத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்சவேணி அம்மையாரின் இழப்பு, குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரத்துக்கு "விஜய் தான்" முதல் காரணம்... பிரேமலதா பரபரப்பு பேட்டி...!
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த்தின் தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிகவின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் செய்தியில், தேமுதிக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் L. K. சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துளளார்.
இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு எதுவும் தெரியாதா? அது அவரோட ஸ்டைல்! பிரேமலதா ஓபன் டாக்..!