பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!
ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும் என்று உறுதி அளித்தார்
சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டிற்கும் முதலமைச்சர் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரேமலதா, விஜய் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யார் என பதிலளிக்க வேண்டும் என்றார்.
அடுத்ததாக ராதன் பண்டிட்டிற்கு அரசு பதவி கொடுத்தது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்வர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். விசிக எம்எல்ஏ வன்னியரசு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் விஜய் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு அவருடைய ராஜ குருவாக இருப்பவரை ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு ராஜகுருவா இருந்தால் உங்க பர்சனலா அவர வச்சுக்கணும். அவரை வந்து அரசு உயர் பதவியிலே கொண்டு வந்து இளைஞர்களை, நம்பி மக்கள் வாக்களிச்சிருக்காங்க. இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தை சொல்கிறீர்கள்?, என்ன வரலாற்றை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க? என்பதை நிச்சயம் தெளிவுபடுத்தணும் என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், "ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும்" என்று உறுதி அளித்தார். அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை அவர் இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்.
"இந்த அரசு ஒருபோதும் தனது மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து பிறழாது" என்று குறிப்பிட்ட விஜய், முந்தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் என்றும் விஜய் அறிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!