கர்நாடக கார்கேவிற்கு எம்.பி. சீட்?.... காங்கிரஸிடம் அடிபணிந்த ஸ்டாலின் தமிழருக்கு துரோகம் செய்யும் திமுக...!
காவிரியில் தண்ணீர் தராத கன்னடருக்கு தமிழ்நாட்டில் இருந்து ராஜ்ய சபா சீட் வழங்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழர்களையும், தமிழக விவசாயிகளையும் உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது. 40 சட்டமன்ற தொகுதிகளுடன் 2 ராஜ்யசபா சீட்டும் வேண்டும் என காங்கிரஸ் திமுகவிடம் அடம்பிடித்து வருகிறது. ஆனால் திமுகவோ இந்த முறை 25 எம்.எல்.ஏ. சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கவே ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘விடாக்கண்டனாக’ ராகுலும், ‘கொடாக்கண்டனாக’ ஸ்டாலினும் மல்லுக்கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஒரு ராஜ்யசபா சீட்டையும் மு.க.ஸ்டாலின் காங்கிரஸில் யாருக்கு ஒதுக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகி பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். அந்த எம்.பி. சீட்டை காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்கேவுடைய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காலம் விரைவில் முடியவடைய உள்ளது.
மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் தான் அவரால் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியும். இந்தியா முழுவதும் 37 மாநிலங்களவை சீட் காலியாக இருந்தாலும் காங்கிரஸுக்கு எங்குமே வாய்ப்பில்லை. கர்நாடகாவில் காலியாக உள்ள ஒரே ஒரு எம்.பி. சீட்டிலும் மேகதாதுவில் அணைக்கட்டியே தீருவேன் என அடம்பிடிக்கும் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் போட்டியிட உள்ளதால் அங்கு கார்கேவிற்கு வாய்ப்பில்லாமல் போனதால், தமிழ்நாடு வழியாக கார்கேவை எம்.பி.யாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதனால் தான் திமுகவிடம் இப்படியொரு டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் உட்பட தவெக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்! அர்ஜுன் சம்பத் ஆவேச பேட்டி!
மேலும் தவெகவிடம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும், காங்கிரஸை ஏற்க விஜய் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள ஸ்டாலினுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிக சீட், உள்ளாட்சியில் பங்கு என தவெகவை காட்டி மிரட்டினால், மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என மறுத்துவிட்டு ராஜ்யசபா சீட் மட்டும் வாங்கி வாங்கிக்கொள்ளுங்கள் என ஸ்டாலின் வழிக்கு வந்துவிடுவார் என காங்கிரஸ் கணக்கு போட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி திமுக தலைமையும் காங்கிரஸின் ராஜ்யசபா சீட் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசியலின் முக்கிய புள்ளியான கார்கேவிற்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.யாக வாய்ப்பு தர ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யார் பாஸ்? யார் மாஸ்? அன்னைக்கு தெரியும்... விஜய்க்கு நெத்தியடி பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்...!