×
 

பறக்கும் படைக்கிட்ட சிக்காம பணப்பட்டுவாடா செய்வது எப்படி? அரசியல் மகளிருக்கு ஸ்பெஷல் டிரெய்னிங் !!

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த பணியில் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த திமுக வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர். பணப் பணியில் மகளிர் குழுக்களை அதிகம் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சில நாட்களாக மகளிர் மற்றும் இளைஞரணி உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 4 வாக்காளர்கள் உள்ள குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு இரு கட்டங்களாக 2,000 ரூபாயும் வழங்க திமுகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஒரு பூத்தில் 1,000 வாக்காளர்கள் இருந்தால், சுமார் 700 பேருக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

பணத்தை பாதுகாப்பாக வைக்க சிறிய கடைகள் மற்றும் நம்பகமான நண்பர்களின் வீடுகளை பயன்படுத்துகின்றனர். ‘பூத்’ அடிப்படையில் கணக்கிட்டு, இளைஞரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிர் 10 முதல் 12 பேர் கொண்ட குழுக்கள் மூலம் பணத்தை வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துவங்கியாச்சு தேர்தல் திருவிழா!! பிரசார பொருட்களுக்கு எகிறியது டிமாண்ட்!

ஒவ்வொரு நபரும் 25 குடும்பங்களுக்கு மட்டும் பொறுப்பேற்று, ஒரு மணி நேரத்துக்குள் பணத்தை வழங்கி விட்டு திரும்ப வேண்டும். பணத்துடன் வேட்பாளரின் படம் மற்றும் கட்சி சின்னம் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும். 

பணம் கொடுக்கும்போது சிரித்த முகத்துடன் “எங்கள் வேட்பாளர் அனுப்பியது” என்று மட்டும் சொல்லிவிட்டு உடனே வெளியேற வேண்டும். வேறு எதுவும் பேசக்கூடாது. அடுத்த நாள் மீண்டும் வீடுகளுக்குச் சென்று வாக்கு கேட்க வேண்டும்.

இந்த முறை மகளிரை அதிகம் ஈடுபடுத்த காரணம், தவெகவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதால், திமுக இளைஞர்கள் பணப்பட்டுவாடா செய்யும் போது தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மகளிர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் பணம் பிடிபட்டாலும் 50,000 ரூபாய்க்கு உள்பட்ட தொகையாக இருப்பதால் பறிமுதல் செய்ய முடியாது என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கமாக இளைஞர்களை மட்டுமே பயன்படுத்தும் பணப்பட்டுவாடா பணியில் இந்த முறை மகளிர் குழுக்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்படுவது திமுகவின் புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த திட்டம் திமுக வேட்பாளர்களுக்கு வாக்குகளை உறுதி செய்ய உதவும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

இதையும் படிங்க: நாளை மோடி தமிழகம் வருகை!! நாகர்கோவிலில் ரோடு ஷோ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share