×
 

நாளை மோடி தமிழகம் வருகை!! நாகர்கோவிலில் ரோடு ஷோ! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 15) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இந்த வருகையை மேற்கொள்கிறார். 

டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைகிறார்.

பின்னர் கார் மூலம் வேப்பமூடு பகுதிக்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து ‘ரோடு ஷோ’வாக வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். இந்த ரோடு ஷோவில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களுடன், நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட பாஜக வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டப்படும்.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரோடு ஷோ நடைபெறும் வேப்பமூடு, மணிமேடை, அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் வடசேரி பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நிற்பதற்கு தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதி மக்கள் வேப்பமூடு மற்றும் மணிமேடைப் பகுதியிலும், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதி மக்கள் அண்ணா ஸ்டேடியம் பகுதியிலும், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதி மக்கள் வடசேரி அண்ணா சிலை அருகிலும் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்களுக்கும் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர வேண்டாம்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் ரோடு ஷோ தமிழக தென் மாவட்டங்களில் என்.டி.ஏ. கூட்டணிக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை மயிலாப்பூரில் பிரதமர் மோடி பிரசாரம்!! மீண்டும் தமிழகம் விசிட்! தேதி குறிச்சாச்சு! பரபரக்கும் பாஜகவினர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share