×
 

அதிமுக கரைவதால் ஆபத்து திமுகவுக்குத்தான்!! மு.க.ஸ்டாலின் டேபிளுக்கு போன ரகசிய சர்வே! பதற்றத்தில் அறிவாலயம்!

சென்னை: த.வெ.க.,வில், அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் இணைவதால், தி.மு.க.,வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, தி.மு.க., தரப்பில், 'சர்வே' எடுக்கப்படுகிறது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிமுகவினர் பெருமளவில் இணைவதால் தி.மு.க.வுக்கு வரும் இடைத்தேர்தல்களில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தி.மு.க. தலைமை ரகசிய சர்வே நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்க உதவியாக தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு அளித்தன. சட்டசபையில் நம்பிக்கை வாக்கு ஓட்டெடுப்பின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் ஆறு பேர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்தப் போக்கு தொடரும் நிலையில், விரைவில் ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தேய்பிறை நிலவாய் தேயும் அதிமுக! தவெக தாவும் நிர்வாகிகள்! விஜய் கட்சியில் ஐக்கியமாகும் மாவட்ட செயலாளர்கள்!

இந்நிலையில், அதிமுகவினரின் தவெக இணைப்பு இடைத்தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய தி.மு.க. தலைமை ரகசிய சர்வே ஒன்றை நடத்தி வருகிறது. கட்சியின் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் இந்த சர்வே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

லண்டனில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திரும்பியதும் சர்வே அறிக்கை அவரிடம் சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைமை புதிய வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் தவெக பக்கம் திரும்பியது ஏற்கெனவே தி.மு.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அதிமுகவில் இருந்தும் பலர் தவெகவுக்கு செல்வது தி.மு.க.வின் வாக்கு வங்கியை பாதிக்கும் அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது. 

இந்த ரகசிய சர்வே முடிவுகள் தி.மு.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் களம் தற்போது மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்த கூட்டணி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தவெக தாவிய அதிமுக மாஜிக்களுக்கு ஆப்பு வைக்க இபிஎஸ் திட்டம்! டெல்லிக்கு கைமாறும் ஊழல் ஆவணங்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share