×
 

ராகுல்காந்தியுடன் போனில் பேசிய மு.க.ஸ்டாலின்!! கனிமொழி சந்திப்பின் போது காங்., நிர்வாகி மீது புகார்!!

டெல்லியில் நேற்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி சந்தித்து பேசினார். அப்போது, மொபைல் போன் வாயிலாக ராகுலுடன் ஸ்டாலின் பேசியுள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டெல்லியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக பார்லிமென்ட் குழு தலைவர் கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மொபைல் போன் மூலம் ராகுலுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக ஐவர் குழுவை அமைத்தார். இதில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடம்பெற்றனர். காங்கிரஸ் தரப்பு திமுகவும் இதேபோல் ஒரு குழு அமைக்கும் என எதிர்பார்த்தது. ஆனால் திமுக தலைமை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

டிசம்பர் 3-ஆம் தேதி ஐவர் குழு சென்னையில் ஸ்டாலினை சந்தித்தது. முதலில் மறுத்த ஸ்டாலின், மரியாதைக்காக சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அப்போது கிரிஷ் சோடங்கர், வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், 20 நாட்களில் முடிவு சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 70 தொகுதிகள் பட்டியலையும் கொடுத்தார். இதை எதிர்பாராத ஸ்டாலின், "தொகுதி பங்கீடு குறித்து அவசரப்பட வேண்டாம், டெல்லியில் பேசிக்கொள்வோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியிலேயே இருங்க!! தவெக போகாதீங்க!! ராகுல்காந்தியை சந்திக்கும் கனிமொழி கோரிக்கை!

அதன் பிறகு கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர் போன்றோர் ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்தியதால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த 18-ஆம் தேதி ராகுல் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் கிரிஷ் சோடங்கர் அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய கனிமொழி-ராகுல் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், கிரிஷ் சோடங்கரின் அணுகுமுறை ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை. மரியாதைக்காக சந்தித்தபோது 70 தொகுதி கோரிக்கையும் பட்டியலும் கொடுத்தது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே "கிரிஷ் சோடங்கருடன் பேச மாட்டோம்" என உறுதியாக கூறினார். அதன் பிறகே ராகுலுடன் நேரடி பேச்சு நடத்த ஒப்புதல் கிடைத்தது. இதனால் கனிமொழி சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பு சுமூகமாக நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொகுதி எண்ணிக்கை குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் மரியாதைக்காக கோருவதை வலியுறுத்தியது. கூட்டணி தொடரும் என உறுதியானது. திமுக தரப்பு குழு அமைத்த பிறகு பேச்சு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ல் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இப்போது அதிகம் கேட்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்த முயலும் நிலையில், இந்த பேச்சு வார்த்தை தேர்தல் கணக்குகளை பாதிக்கும். விரைவில் தெளிவான முடிவு வருமா என அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல் தேதி!! கூட்டணியில் இழுபறி!! மாநில காங்கிரசாருடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share