திமுக கூட்டணியிலேயே இருங்க!! தவெக போகாதீங்க!! ராகுல்காந்தியை சந்திக்கும் கனிமொழி கோரிக்கை!
மாற்று அணி குறித்து யோசிக்கும் காங்கிரசை, தொடர்ந்து கூட்டணியில் தக்க வைக்கும் முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் சிலர் "மாற்று அணி குறித்து யோசிக்கலாம்" என்று பேசி வரும் சூழலில், தி.மு.க. தலைமை கூட்டணியை தக்க வைக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை நாளை (ஜனவரி 21, 2026) டெல்லியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸை தொடர வைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி டெல்லியில் நடந்த காங்கிரஸ் ஆயத்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட 41 பேர் பங்கேற்றனர். அப்போது "தி.மு.க.விடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும். ஆட்சியில் பங்கு கிடைக்காவிட்டால் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்" என்று சிலர் வலியுறுத்தினர். மறுபக்கம் "தி.மு.க. கூட்டணியில் நீடிக்க வேண்டும்" என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல் தேதி!! கூட்டணியில் இழுபறி!! மாநில காங்கிரசாருடன் ராகுல் காந்தி நாளை ஆலோசனை!
கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராகுல் காந்தியை தனியாக சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார். சிதம்பரம் ராகுலிடம் கூறியதாவது: "2004 முதல் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடித்து வருகிறது. சோனியா காந்தி - கருணாநிதி தலைமையில் உருவான இந்த கூட்டணி தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி. அதிக இடங்கள் கேட்கலாம். ஆட்சியில் பங்கு என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகு பார்க்கலாம்.
இண்டியா கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகினால் காங்கிரஸுக்கே பின்னடைவு. 2029 லோக்சபா தேர்தலில் பிரதமர் பதவிக்கு நீங்கள் வர வேண்டுமானால் உ.பி., தமிழக எம்.பி. எண்ணிக்கை முக்கியம். மாற்று அணி யோசனை காங்கிரஸ் மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும்."
ராகுலிடம் சிதம்பரம் வலியுறுத்திய இந்த தகவல் அன்று இரவே முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்க ஸ்டாலின் முன்வந்துள்ளார். இன்று (ஜனவரி 20) சென்னை அறிவாலயத்தில் நடக்கும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
மாலையில் கனிமொழி 'தி திராவிடன் பாத்வே' என்ற ஆங்கில நூலை வெளியிடுகிறார். இந்நூலில் ஈ.வெ.ரா., அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திராவிட அரசியல் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? ராகுல் என்ன முடிவெடுப்பார்? 28 தொகுதிகள் உறுதியாகுமா? தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது!
இதையும் படிங்க: திமுக-வா? தவெக-வா? குழம்பி தவிக்கும் காங்.,!! முதல்வர் ஸ்டாலினுடன் பா.சிதம்பரம் திடீர் சந்திப்பு!