கரூர் அதிமுகவுக்கு கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி... திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணனுக்கு ஸ்கெட்ச்...!
கரூர் மாவட்டத்தில் முக்கியமாக கரூர் சட்டமன்ற தொகுதி மட்டும் குறிவைத்து சேலத்தை சார்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணன் அதிமுக நிர்வாகிகளை வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும்: அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் நில பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் குழு அமைத்து தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி போட்டியை துவக்கி வைத்தார்.
முதல் நாள் போட்டிகளில் பெண்களுக்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார் போட்டியில் 14 முதல் 19 வயது வரை பெண்கள் கலந்து கொண்டனர் மற்றும் பொது பிரிவு வயது வரம்பு கிடையாது பெண்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு பதில் கூற முடியாது...எடப்பாடி பழனிசாமியை ‘நோஸ் கட்’ செய்த செந்தில் பாலாஜி...!
இப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு 15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையை வழங்க உள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர் முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில்: 2026 சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க தலைமையிலான கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். முதலமைச்சர் அவர்கள் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்பார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்து சமய அறநிலை துறைக்கு சார்ந்த இடங்கள் கையக ப்படுத்தப்படவில்லை ஆனால் கரூர் மாவட்டத்தில் முக்கியமாக கரூர் சட்டமன்ற தொகுதி மட்டும் குறிவைத்து சேலத்தை சார்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணன் அதிமுக நிர்வாகிகளை வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு அலுவலர் குளறுபடியால் இந்த சட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் தீர்வு காணப்படும் 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார். வெண்ணமலையில் இனாம் நிலம் பிரச்சினை ஏற்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் இந்த குளறுபடி ஒன்றும் தெரியாதவர்கள் போல் அதிமுக சார்ந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மீண்டும் தெரிவித்து வருகின்றனர். என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!