பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!
உடல் நலக்குறைவு காரணமாக, தி.மு.க., பொதுச்செயலர் பதவியை துறக்க துரைமுருகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. பொதுச் செயலரும், மூத்த தலைவருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக பொதுச் செயலர் பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழு தன் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, கட்சியின் மாநில நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை செய்ய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஆலோசனைகளை அவர் நெருக்கமானவர்களுடன் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு துரைமுருகன் அறிவாலயத்துக்கு சரிவர வராத நிலை உள்ளது. ஓய்வு எடுக்க விரும்புவதாகவும், தனது பொதுச் செயலர் பதவியை தற்போதைய பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். டி.ஆர்.பாலுவை பொதுச் செயலராக நியமிக்க கட்சித் தலைமை முன்வந்தால் துரைமுருகன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
எனினும், ஸ்டாலின் குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக வேறு யாருக்காவது பதவி வழங்க முயன்றால், துரைமுருகன் பதவி விலக மறுக்கக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். துரைமுருகனின் உடல்நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் உயர்மட்டத்தில் இது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து பிரச்சாரமா.? என்ன நடந்துச்சு.? தவெக, தேர்தல் ஆணையத்துக்கு பறந்த உத்தரவு..!!
தி.மு.க.வில் அடுத்தகட்ட நிர்வாக மாற்றங்கள் வரவிருக்கும் சூழலில், பொதுச் செயலர் பதவி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டி.ஆர்.பாலு போன்ற மூத்த தலைவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது புதிய முகம் உயர்த்தப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.
இந்த மாற்றங்கள் தி.மு.க.வின் எதிர்கால அரசியல் உத்திகளையும், கட்சியின் உள் இயக்கத்தையும் பெரிதும் பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. துரைமுருகனின் சாத்தியமான விலகல் தி.மு.க.வில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனி விமானத்தில் கூர்க் பறந்தார் மு.க.ஸ்டாலின்!! மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசனுடன் பேமிலி டூர்!