×
 

சிறுபான்மையினர் ஓட்டுக்கு குறி வைக்கும் திமுக!! கோயில் கட்டுவதில் சிக்கல்!! சர்ச், மசூதிக்கு FREE PASS?!

‘ஓட்டு வங்கி அரசியலுக்காக சட்டத்துக்கு எதிராக செயல்படும் தமிழக அரசின் செயல் ஜனநாயக விரோதமானது’ என்று, ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அரசாணைக்கு எதிராக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசாணை மத வழிபாட்டுத் தலங்களுக்கு (கோயில் தவிர்த்து) தடையில்லா சான்று பெறத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க சிறுபான்மை ஓட்டு வங்கியை குறிவைத்து போடப்பட்டுள்ளது என்று ஹிந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இனிமேல் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தடையில்லா சான்று பெற வேண்டியதில்லை” என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜனவரி 8-ஆம் தேதி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஏற்கனவே தமிழகத்தில் பல இடங்களில் அனுமதியின்றி ஜெபக்கூடங்கள், மசூதிகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து புகார் அளித்தாலும், முறையிட்டாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தடையில்லா சான்று தேவையில்லை என்ற புதிய அரசாணை வெளியானதால், இனி இன்னும் அதிக அளவில் அனுமதியின்றி மத வழிபாட்டுத் தலங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தீயசக்தி திமுக!! மு.க. ஸ்டாலினை கடுப்பேத்த தவெக புது டெக்னிக்!! குழந்தைகளிடத்தில் பிரசாரம்!

இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   “இந்த அரசாணை முழுக்க முழுக்க தி.மு.க.வின் சிறுபான்மை ஓட்டு வங்கியை குறிவைத்து போடப்பட்டுள்ளது. ஹிந்து கோயில் கட்டுவதற்கு பல்வேறு சட்ட சிக்கல்களையும் நடைமுறை தடைகளையும் உருவாக்கும் அதே அரசு, சிறுபான்மை மத வழிபாட்டுத் தலங்களை எளிதாக பெருகச் செய்யும் வகையில் சட்டத்தை தளர்த்தியுள்ளது. இது ஜனநாயக விரோதமானது.  

ஓட்டு வங்கி அரசியலுக்காக சட்டத்துக்கு எதிராக செயல்படும் இந்த அரசின் செயலை ஹிந்துக்கள் உணர வேண்டும். இந்த அரசாணையால் சமூகத்தில் அமைதியின்மை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் ஹிந்து முன்னணி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாணை தொடர்பாக பல அமைப்புகளும், ஹிந்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போராடுனா கஞ்சா CASE... போலீஸ் பகிரங்க மிரட்டல்..! இடைநிலை ஆசிரியர்கள் புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share