×
 

காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

தி.மு.க., கூட்டணியில், மற்ற கட்சிகளுக்கு அதிக 'சீட்' கொடுத்திருப்பதை சுட்டிக்காட்டி, தங்களுக்கும் கூடுதல் 'சீட்' ஒதுக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி தீவிரமடைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் (மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்) தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தி.மு.க. தரப்பு, கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட 6 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, இம்முறை தொகுதிகள் குறைக்கப்படும் என உறுதியாக கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் + ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. கடந்த முறையை விட 3 தொகுதிகள் கூடுதல். புதிதாக இணைந்த தே.மு.தி.க.வுக்கும் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இதை சுட்டிக்காட்டி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 7 தொகுதிகள் கேட்டு அடம் பிடித்தன. ஆனால் தி.மு.க. தரப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைப்பை தி.மு.க. தரப்பு சுட்டிக்காட்டி கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அப்போது தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இணைந்திருந்தன.

இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை முடிக்க அவசரம் காட்டும் திமுக! காக்க வைக்கப்படும் திருமாவளவன்! கூட்டணிக்குள் சர்ச்சை!

தே.மு.தி.க. 124 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற நான்கு கட்சிகள் சேர்ந்து 110 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டன. தே.மு.தி.க.வுக்கு கூடுதல் சீட் கொடுக்க முன்வந்த அதே கட்சிகள் இப்போது தி.மு.க.விடம் அதிக இடம் கேட்டு முரண்டு பிடிப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இம்முறை கூடுதல் தொகுதிகள் எதிர்பார்ப்பதால், அவர்களுக்கும் இதே மாதிரியான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், “த.வெ.க. பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவே காங்கிரசுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக கொடுக்கப்பட்டன. தே.மு.தி.க.வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இழுபறி போட்டாலும், இறுதியில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். வி.சி.க.யும் விரைவில் சுமுகமாக முடிவு செய்யும்” என்றனர்.

தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதால், கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தம் தொடர்ந்தாலும், தி.மு.க. தலைமை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share