கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!
கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை ஏமாற்றிய மூவர் அணி குறித்து, அவரது மனைவி துர்கா நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளதால், தி.மு.க.,வில் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., படுத்த தோல்விக்குப் பின், கட்சியில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரே மாதிரியான தவறான அறிக்கைகளை அளித்து ஏமாற்றிய ‘மூவர் அணி’ துர்கா ஸ்டாலின் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களின் தாக்கம், சட்டம் ஒழுங்கு நிலை, வாக்காளர்கள் மனநிலை ஆகியவற்றை உளவுத்துறை மூலமும், மருமகன் சபரீசன் நடத்தும் தேர்தல் வியூக நிறுவனம் மூலமும் சேகரித்து ஸ்டாலினுக்கு அளித்து வந்தனர். இந்தப் பணியில் சபரீசனின் நிறுவன உயர் அதிகாரி, உளவுத்துறை அதிகாரி மற்றும் முதல்வரின் உதவியாளர் ஒருவர் ஈடுபட்டிருந்தனர்.
இம்மூவரும் ‘சிண்டிகேட்’ அமைத்து, ஐந்து ஆண்டுகளாக ஒரே வகையான அறிக்கைகளை ஸ்டாலினுக்கு அளித்து வந்துள்ளனர். பெண்கள் உள்பட பல தரப்பினரிடையே தி.மு.க., செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், அமைச்சர்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும், மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தவறான தகவல்களை வழங்கினர்.
இதையும் படிங்க: என்ன விலை கொடுத்தாலும் விஜய் முதல்வராக கூடாது! உதயநிதி பிடிவாதம்!! எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி!
அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க பரிந்துரை செய்தனர். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சியினரே கொண்டிருந்த அதிருப்தியை முழுமையாக மறைத்தனர்.
தேர்தல் தோல்விக்குப் பின் மனைவி துர்கா ஸ்டாலின் விசாரணை குழு அமைத்தபோது இந்த மூவர் அணியின் செயல்பாடுகள் வெளியாகின. வசூல் சீட் வாங்கிய வேட்பாளர்களிடம் இருந்து பெரும் தொகையை தேர்தல் வியூக நிறுவனம் வசூலித்ததும் அம்பலமானது. இந்தப் பிரச்னையை திசைதிருப்பும் வகையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 200க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறுகையில், “ஸ்டாலினும் சபரீசனும் இப்போதுதான் முழுமையாக உணர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர். ஐந்து ஆண்டு கால தவறான அறிக்கைகள் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தி.மு.க.,வுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!