என்ன விலை கொடுத்தாலும் விஜய் முதல்வராக கூடாது! உதயநிதி பிடிவாதம்!! எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி!
கனிமொழியின் இந்த உறுதியான நிலைப்பாடு தி.மு.க.,வுக்குள் உள்ள உள் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், தி.மு.க., துணைப் பொதுச் செயலர் கனிமொழி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தி.மு.க., ஆதரவுடன் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்ற பேச்சு முழுக்க முழுக்க வதந்தி என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கனிமொழி புறக்கணித்தார். உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு அவர் உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றிருந்தாலும், அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு தரும் யோசனைக்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க: கனவிலும் நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு!! தன்னால் விரட்டப்பட்டவரிடமே தோற்றுப்போன அன்பில் மகேஷ்!!!
உதயநிதி ஸ்டாலின் மட்டும் விஜய் முதல்வராகக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தன் தந்தையை கொளத்தூரில் தோற்கடித்த விஜய்க்கு எதிராக, எந்த விலையைக் கொடுத்தாவது அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என உதயநிதி உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கனிமொழி மட்டும் இந்த யோசனைக்கு உறுதியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தேர்தலுக்கு முன் தென்மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கனிமொழி, தனது பகுதியில் 13 தொகுதிகளில் 59 சதவீத வாக்குகளைப் பெற்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். சமீபத்தில் உதயநிதியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யும் கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க., தொண்டர்களும் நிர்வாகிகளும் கனிமொழியை தொடர்புகொண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கனிமொழி, “பொறுமையாக இருங்கள். கட்சி நலன் கருதி ஸ்டாலின் சரியான முடிவு எடுப்பார்” என ஆறுதல் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கனிமொழி கூறியதாவது: “தி.மு.க., ஆதரவில் அ.தி.மு.க., ஆட்சி அமைக்கப் போவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி. தேர்தல் முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும். கவர்னரே தேவையில்லை என்பது தி.மு.க.,வின் நிலைப்பாடு” என்றார்.
கனிமொழியின் இந்த உறுதியான நிலைப்பாடு தி.மு.க.,வுக்குள் உள்ள உள் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் வியூக நிறுவனத்தை நம்பி ஏமாந்தார் மு.க.ஸ்டாலின்! பின்னணியில் பகீர்! திமுக கோட்டை விட்டது இங்கேதான்!