×
 

4 வருஷமா எங்க காணாமல் போனீங்க?... எடப்பாடி பழனிசாமியை டாரு டாராக கிழித்த கனிமொழி...!

.நான்கு ஆண்டுகளாக காணவில்லை தற்போது திடீரென தேர்தல் வந்துவிட்டது எனக்கு வாக்களியுங்கள் என்று பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். எ

தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு தான் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது.நான்கு ஆண்டுகளாக காணவில்லை தற்போது திடீரென தேர்தல் வந்துவிட்டது எனக்கு வாக்களியுங்கள் என்று பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் குறித்து கனிமொழி எம்.பி விமர்சனம்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்  நாகர்கோவில் தனியார்   திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவில் திமுக தென் மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம். பி, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்பேசிய கனிமொழி எம். பி கூறியது, முன்பு தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்  தேர்தல் எப்படி நடக்கிறது. என்பதை கண்காணிப்பதற்காக ஒரு தேர்தல் கமிஷன் இருந்தது.இப்பொழுது இருக்கக்கூடிய எலக்சன் கமிஷன்  தேர்தலையே அவர்கள் மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கான ஒரு தேர்தல் ஆணையம் இருக்கிறது என்ற சந்தேகம் நம் அத்தனை பேருக்கும் இருக்கிறது.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு பாஜகவை அறிமுகப்படுத்தியதே தேமுதிக தான்... எல்.கே.சுதீஷ் காட்டம்...!

ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா அல்லது தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த ஆட்சியா என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்குகள் திடீரென்று காணாமல் போயிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான வாக்குகள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து கொண்டு தான் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. இன்னைக்கு நாலு வருஷமா காணல எங்க போனார் என்று தெரியவில்லை திடீர்னு வந்து தேர்தல் வந்துவிட்டது எனக்கு வாக்களியுங்கள் என்று பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் மறைமுகமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர் பாஜக அவர்களுடைய சதி திட்டத்திற்கு பலியாகி விடாமல் இந்த தேர்தல்  வெற்றி வாய்ப்பை கொண்டு வந்து முதலமைச்சர் அவர்களின் கைகளில் சேர்க்க வேண்டிய கடமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது  எனக்கூறினார்.

இதையும் படிங்க: என்ன நடக்க போகுதோ? செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share