×
 

“ஒரு மணி நேரம் வெயில்ல நிற்க முடியல...” - பெயரைக்கூட சொல்லாமல் விஜயை சரமாரியாக சாடிய திமுக அமைச்சர்...!

தற்போது இது புதிய ரசிகர்கள் கூட்டம் தானே தவிர எந்த ஒரு அனுபவும் இல்லாதவர்கள்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் உள்ள இராணியார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான எஸ். ரகுபதி வாக்களித்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  தேர்தல் ஆணையம் ஒரு கட்சியுடைய கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் களம் நன்றாக இருக்கிறது.இன்றும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.

இளம்  வாக்காளர்களை கவரும் வகையில்  நாங்கள் அவர்களை நாடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம் என்னென்ன  நன்மைகள் எல்லாம் செய்தோம் என்று சொல்லி உள்ளோம். எம்ஜிஆர் என்பது வேறு தற்போதுள்ள நடிகர் என்பது வேறு என்பதை வித்யாசப்படுத்தியுள்ளோம். 

இதையும் படிங்க: சிக்கித் தவிக்கும் வாக்காளர்கள்..! வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கணும்..! விஜய் வலியுறுத்தல்..!!

எம்ஜிஆர் திமுக உறுப்பினராக இருந்து எம்எல்ஏ ஆக இருந்து இயக்கத்தின் பொருளாளராக இருந்து அதற்கு பிறகு பிரச்சனை ஏற்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார். எம்ஜிஆர் மன்றங்கள் தேர்தல் களத்தில் 1957ல் இருந்து பணியாற்றி இருக்கின்றனர். எம்ஜிஆர் மன்றம் என்பது அனுபவம் உள்ளவை 62, 67 , 71 வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவை.

ஆனால் தற்போது இது புதிய ரசிகர்கள் கூட்டம் தானே தவிர எந்த ஒரு அனுபவும் இல்லாதவர்கள். எம்ஜிஆர் மன்றம் என்பது வேறு இந்த மன்றம் என்பது வேறு அது அடிப்படையிலேயே அரசியல் ரீதியாக வளர்க்கப்பட்டது. அதனால் தான் வெற்றி பெற முடிந்தது.

சுகவாசிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் கேரவனிலிருந்து அரை மணி நேரம் வெளியே வந்துவிட்டு இண்டு மணி நேரம் வெயிலில் நிற்கக்கூட முடியாத ஒருவர் மக்களுக்காக களப்பணி ஆற்றுவார் என்று எண்ணுவது தவறான ஒன்று.

எங்களது முதலமைச்சர் களப்பணியில் சிறந்தவர் களப்பணி ஆற்றக்கூடிய வல்லவர் அது போல் உதயநிதி ஸ்டாலினும் களப்பணி ஆற்ற கூடியவர்.  அதிகமான களப்பணி  ஆற்றக் கூடியவர்கள் தான்  மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ளவர்கள். 

எடப்பாடி பழனிச்சாமியை பொருத்தவரை அவர்  செல்வாக்கை என்றைக்கோ இழந்து விட்டார் பத்து தேர்தலில் தோல்வியை சந்தித்து விட்டார். பதினாறாவது தோல்வியை சந்திக்க தயாராக இருக்கிறார். அக்னி நட்சத்திரம் வந்தால் தான் அதற்கு பிறகு மழை வரும் அக்னி நட்சத்திரம் வரவேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம்.

அக்னி  நட்சத்திரத்துடைய சூட்டையும் தாங்கி மக்கள் வாழ முடியும் என்பதை நிரூபிக்கின்ற நாள்தான் அக்னி நட்சத்திரம். அக்னி நட்சத்திர வெப்பம் என்பது மக்களை பாதித்ததாக வரலாறு கிடையாது. அக்னி நட்சத்திரம் சூரிய வெப்பத்தால் இறந்ததாகவோ கஷ்டப்பட்டதாகவோ  வரலாறு கிடையாது அக்னி நட்சத்திரமாக இருந்தாலும் எந்த நட்சத்திரமாக இருந்தாலும் அது எங்களது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நட்சத்திரம் தான் நாங்கள் வெற்றி பெறுவோம்.

களத்தைப் பொறுத்தவரை முதல் இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். இரண்டாவது இடத்திற்கு தான் போட்டியே இரண்டாவது இடத்தில் யார் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும் என்றார். 
 

இதையும் படிங்க: “தல” தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிய ‘ஜனநாயகன்’... நீலாங்கரையில் வாக்களித்த தவெக தலைவர் விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share