×
 

காங்கிரஸ்காரங்க உயிரை வாங்குறாங்க! அமைச்சர் சர்ச்சை பேச்சு! திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிகரிக்கும் விரிசல்!

''காங்கிரசில் ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர்,'' என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் கே. ராஜகண்ணப்பன் கூட்டணி கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் – விடுதலை சிறுத்தைகள் இடையேயான பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் ஆற்றல் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. திராவிட மாடல் ஆட்சியால் தான் எங்களை போன்றவர்கள் அமைச்சராக முடியும். மீண்டும் திமுக ஆட்சி வரும், நீங்கள் மீண்டும் முதல்வராக வருவீர்கள் என ஸ்டாலினிடம் சொன்னேன். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அதன்பின் வர முடிந்ததா? சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். கூட்டணியில் உள்ளார்கள், ஓரிருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகின்றனர்.

நானும் செல்வப்பெருந்தகையும் ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்தோம். என்ன செய்வது, கூட்டணியில் இருக்கிறார்கள், போட்டோவுக்கு போஸ் கொடுக்க போய் நிற்கிறோம். எந்த கூட்டணி என்றாலும் சரிதான், ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. கூட்டணி ஆட்சி என செய்தி வருகிறது. 

இதையும் படிங்க: கொடுமையின் உச்சம்!! வெட்கக்கேடு!! சாபக்கேடு! விஷப்பூச்சி, பாம்பு கடியால் இறந்த மாணவர்கள்! இபிஎஸ் கொந்தளிப்பு!

கருணாநிதி 110 இடங்களில் வென்றபோது கூட்டணி ஆட்சி அமைத்தாரா? வரும் தேர்தலில் ஸ்டாலின் 150 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்கிறதை செய்து கொடுக்கின்றோம். கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

கன்னியாகுமரிக்கு சென்றபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை வைத்தார், அதை செய்து கொடுத்தேன். நாங்கள் எந்த கட்சி எம்.எல்.ஏ. என்று பார்த்து செய்கிறோமா? விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ.க்கும் கேட்டதை செய்து கொடுக்கிறோம். அதனால் வேண்டும் என்பதை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

இந்த பேச்சு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரை சுட்டிக்காட்டியது போல அமைந்துள்ளது. இது திமுக கூட்டணியில் பா.ம.க. சேர்வது தொடர்பான சர்ச்சையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் பா.ம.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள நிலையில், ராஜகண்ணப்பனின் கருத்து கூட்டணி ஒற்றுமையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

2026 தேர்தலுக்கு முன் இத்தகைய உள் மோதல்கள் திமுகவுக்கு சவாலாக அமையலாம். காங்கிரஸ் தரப்பு இதற்கு பதிலளிக்குமா என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படிங்க: விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share