நல்வரவு..!! திமுகவுடன் தேமுதிக கூட்டணி... முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!
திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எல். கே.சுதீஷ் உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது போது உடன் இருந்தனர்.
முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு இது நடந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் முதலமைச்ச ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!
கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன் என்று கூறினார். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு, நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!