×
 

கரூர்காரர்களின் மண்ணை தூவி ஆட்டைய போட்ட கோவை திமுக!! தீர விசாரிக்கும் செந்தில்பாலாஜி குரூப்ஸ்!

கோவையில் தி.மு.க.வில் பெரும் பரபரப்பு: பணப்பட்டுவாடா பணத்தில் கணிசமாக சுருட்டியதாக புகார் – செந்தில் பாலாஜி கோபம்!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற நிலையில், கோவை மாவட்ட அரசியல் களம் இன்னும் பரபரப்பாக உள்ளது. குறிப்பாக, தி.மு.க. சார்பில் நடைபெற்ற பணப்பட்டுவாடா விவகாரம் கட்சியுக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக ஏற்கனவே புகார்கள் எழுந்த நிலையில், தி.மு.க.வில் பணம் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவை தி.மு.க. நிர்வாகிகள் பணத்தை சுருட்டிவிடுவார்கள் என்பதால், கரூரில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்கள் வந்து பட்டுவாடா பணியை தீவிரமாக மேற்பார்வையிட்டனர். ஆனாலும், பல நிர்வாகிகள் கரூர்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவி பெரும் தொகையை சுருட்டியதாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

பணம் கிடைக்காத பெண்கள் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் புகார் அளித்ததையடுத்து, அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், கோவை தெற்கு மற்றும் கோவை வடக்கு தொகுதிகளில் தான் பணம் அதிக அளவில் திசை திரும்பியது தெரியவந்தது. சராசரியாக ஒரு பூத் கமிட்டியில் 200 ஓட்டுகளுக்கான பணத்தை உள்ளூர் நிர்வாகிகள் சுருட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த செந்தில் பாலாஜி, முதற்கட்டமாக கோவை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் பட்டுவாடா பணம் குறித்து விசாரிக்க கரூரில் இருந்து தனி குழுவை அனுப்பியுள்ளார். பூத் வாரியாக கரூர் டீம் நியமிக்கப்பட்டு, பணம் பெற்றவர்களின் பட்டியலை வைத்து ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணையை கண்காணிக்க இரு தொகுதிகளுக்கும் தனிப்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த பகுதியில் பணம் சரியாக செல்லவில்லை, யார் யார் பொறுப்பு என்பது குறித்த அறிக்கை செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் கட்சியில் ‘களையெடுப்பு’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓட்டுப்பதிவுக்கு பிறகும் கோவை தி.மு.க.வில் தொடரும் இந்த உள் பிரச்னை, கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: கடைசி வரை கரூரில் ஏன் வாக்களிக்க வரவில்லை! கோவை தெற்கில் என்ன பணி?! செந்தில் பாலாஜி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share