×
 

செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் கோவையின் 10 தொகுதி வேட்பாளர்கள், பொறுப்பாளர்களை சபரீசன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கொங்கு மண்டலத்தில் தீவிர கள ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில், கோவை மாவட்டத்தின் 10 தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சபரீசன் தனித்தனியாக சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். 

கள நிலவரம் எப்படி உள்ளது, திமுக எந்தெந்த இடங்களில் பலவீனமாக இருக்கிறது, எங்கெங்கு வாக்கு வங்கி உறுதியாக உள்ளது என்பது குறித்து விரிவாக கேட்டறிந்தார். ‘பென் டீம்’ மற்றும் உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் கிடைத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்த சபரீசன், சில நிர்வாகிகள் நிலவரத்தை மாற்றி சொன்னபோது அதை ஏற்க மறுத்தார். குறைபாடுகள் உள்ள இடங்களில் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு பரிசுப் பொருள் அல்லது தொகை வழங்கினால் வாக்காளர்களை ஈர்க்க முடியும் என்பது குறித்தும் சபரீசன் கேட்டறிந்தார். நிர்வாகிகள் தங்கள் தொகுதி நிலவரங்களை விளக்கி, வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பரிசுப் பொருட்கள் மற்றும் தொகை குறித்த பட்டியலை சமர்ப்பித்தனர். குறிப்பாக பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு கூடுதல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்தனர்.

பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு எந்த முறையில் பாதுகாப்பாகவும் திறம்படவும் கொண்டு சேர்ப்பது என்பது குறித்தும் சபரீசன் விரிவாக ஆலோசனை செய்தார்.

அதன்பிறகு, திருப்பூர் மாவட்ட நிலவரம் குறித்து பல்லடம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகியின் தோட்ட வீட்டில் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சபரீசன் மற்றொரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் சபரீசன் இந்த தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. களத்தில் உள்ள உண்மையான நிலவரத்தை நேரடியாக அறிந்து, பலவீனமான இடங்களை உடனடியாக வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share