×
 

சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!

தமிழ்நாட்டில் வேலை கொடுப்பது குறித்து டெல்லியில் இருந்து முடிவு செய்வார்களாம்.100 நாள் வேலை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்ளனர்

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரனை ஆதரித்து கனகாமச்சத்திரம் பகுதியில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது: சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்து அவருக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி.  முதல்வர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார், வரும் தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல், இந்தி படித்தால் தான் நிதி தருவோம் என்கின்றனர்.

100 நாள் வேலை கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் வேலை கொடுப்பது குறித்து டெல்லியில் இருந்து முடிவு செய்வார்களாம்.100 நாள் வேலை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்ளனர்; இதனை எடப்பாடி கேட்க மாட்டார். 3,22,852 அதிமுக ஆட்சியில் குற்றங்கள் நடந்துள்ளன. 2,03,204 திமுக ஆட்சியில் நடந்துள்ளன. திமுக ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் குற்றங்கள் குறைந்துள்ளன. 

இதையும் படிங்க: +2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!

தமிழ்நாட்டில் 99% பெண்களுக்கு நியாயம் கிடைக்கிறது. சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்து அவருக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. குட்கா வழக்கில் சிபிஐ வழக்கு உள்ளவர் தான் திருவள்ளூர் அதிமுக வேட்பாளர் ரமணா. தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இல்லை, அதை கூட எடுத்து சொல்ல, ரமணாவோ எடப்பாடியோ எடுத்து சொல்வதில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும். கடந்த முறை செல்போன் தருவோம் என்றார்கள், கொடுத்தார்களா?. கருணாநிதி கொடுத்த டிவி 30 ஆட்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது.44% பெண்கள் வேலைக்கு போகும் பெண்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தவர் கருணாநிதி
ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை கருத்தில் கொண்ட வண்ண தொலைக்காட்சி பெட்டி தந்து காட்டிய தேர்தல் அறிக்கை.

செல்போன் தருவோம் எனக்கூறி கண்ணால் காட்டாத தேர்தல் அறிக்கை மற்றவர்களின் தேர்தல் அறிக்கை. மினி பஸ் கோரிக்கை நிறைவேற்றப்படும். 10000 பேருந்துகள் வாங்கப்படும் என்றார். 
 

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசின் விரைவான நடவடிக்கை தேவை..!! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share