+2 மாணவி கொடூர கொலை... தூத்துக்குடியில் கால் வைத்ததுமே கனிமொழி கொடுத்த அதி முக்கிய அப்டேட்...!
ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.
சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், எரிவாயு உருளை தட்டுப்பாடு இருப்பதாக ஒரு நிலை உருவாகி இருக்கிறது முக்கியமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் அங்கெல்லாம் தட்டுப்பாடு இருப்பதால் அதை முன்னிட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் வீடுகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் தெரிவித்தாலும் வீடுகளில் பல பேர் இணையதளம் மூலம் பதிவு செய்ய முயற்சி செய்யும்போது கிடைக்கவில்லை என புகார் இருக்கிறது இந்த குழப்பங்களை பிரச்சனைகளை எல்லாம் விரைவில் ஒன்றிய அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என கூறிய கனிமொழி கருணாநிதி.
கப்பல்கள் மூலம் எரிபொருள் வந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது என்ற கேள்விக்கு அப்படி சொல்லி இருந்தால் உண்மையிலேயே தவறான ஒன்று அப்படி சொன்னார்களா என தெரியவில்லை இருக்கக்கூடிய போர் சூழலில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது அவர்களுடைய அன்றாட தேவைகளை அவர்களுக்கு தந்து பாதுகாக்க வேண்டிய கடமை ஒன்றிய அரசாங்கத்திற்கு இருக்கிறது என கனிமொழி கருணாநிதி கூறினார்.
தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை வந்த பிறகு அறிவிக்கப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசின் விரைவான நடவடிக்கை தேவை..!! கனிமொழி எம்.பி வலியுறுத்தல்..!!
விளாத்திகுளம் பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பந்தமாக கேட்டதற்கு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது முழுமையான அறிக்கை வரவில்லை நிச்சயமாக இளம் பெண் உயிரை எடுப்பது என்பது கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. முதலமைச்சர் விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.
காவல்துறையினர் ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி 6 ஆய்வாளர்கள் என 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு எல்லா இடத்திலும் விசாரணை நடந்து வருகிறது குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் கூறினார். 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிப்போம் என்ன விமான நிலையத்தில் கூறினார்.
இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!