×
 

திமுகவில் தலையெடுக்கும் புதிய தலைவர்கள்!! கடுகடுக்கும் ஸ்டாலின்!! உதயநிதிக்கு சிக்கல்!

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில், 'நான் தான் வேட்பாளர்' என, தற்போதே வேட்பாளர்களாக வலம் வர துவங்கியுள்ளனர்.

சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக-வில் வேட்பாளர் தேர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப மனு பெறும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் தங்கள் விருப்ப தொகுதிகளில் 'நான் தான் வேட்பாளர்' என்று அறிவித்து, ஆதரவாளர்களுடன் வலம் வரத் தொடங்கியுள்ளனர். இது கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, முதல்வர் ஸ்டாலின் வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.கூட்டணியின் நெருக்கடி, த.வெ.க.வால் ஓட்டுகள் திசை மாறும் அபாயம் உள்ளதால், வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வலுவான வேட்பாளர்களை நிறுத்தி சவால்களை எதிர்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் பணிகள், செல்வாக்கு, யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என விபரங்களை கேட்டறிந்துள்ளார். உளவுத்துறை போலீசார் மூலமும், முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான ஆய்வு நிறுவனம் வழியாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதிக்கு மூன்று பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் என ஆராயப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்!

இந்நிலையில், சென்னை அண்ணா நகர் எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்தி (ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பர்) அண்ணா நகர் தொகுதி வேட்பாளராக தன்னை அறிவித்து, ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வருகிறார்.

இதேபோல் பல தொகுதிகளில் அதிகாரமிக்கவர்களுக்கு நெருக்கமானவர்கள் 'நான் தான் வேட்பாளர்' என கூறி நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சீனியர் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த விவகாரம் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதும், அத்தகையோரை அழைத்து கண்டித்துள்ளார். தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை, 'நான் வேட்பாளர்' என கூறி எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார். கட்சி ஒழுங்கு காக்க இது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் போடும் கணக்கு! 2026-ல் யாருக்கு எவ்வளவு? 3 அணிகளிடம் ரகசிய பேச்சு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share