×
 

பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!

திமுக எத்தனை பொய்களை சொன்னாலும், இந்தமுறை திமுக தோற்று ஓடப்போவது உறுதி என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து, “திமுக எத்தனை பொய்களை சொன்னாலும் இந்த முறை திமுக தோற்று ஓடப்போவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) - அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரமசிவம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விடியல் சேகர் ஆகியோருக்கு ஆதரவாக அண்ணாமலை தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்துக்குப் பிறகு அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழக மக்கள் திமுகவின் ஏமாற்று வித்தைகளையும், ஊழல் முறைகேடுகளையும் நேரில் பார்த்துவிட்டனர். விவசாயிகள் அதிகம் வசிக்கும் வேடசந்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த சுவாமிநாதன் செய்த ஒரே சாதனை, அமலாக்கத்துறையை வேடசந்தூருக்கு அழைத்து வருவது மட்டுமே. அவரது முறைகேட்டால் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லம் கூட கரைந்து ஓடியது. தமிழக மக்கள் இதை மறக்கவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: “இந்த கருணாநிதியை விட்டால் பெரிய பிரச்சனையாகிடும்...” - வாண்டடாக திமுகவை சீண்டிய அண்ணாமலை...!

மேலும், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, லோக்சபா எம்.பி.க்களின் எண்ணிக்கையை 50% உயர்த்தும் சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் தமிழகத்துக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்ற அடிப்படையற்ற பொய்யை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி மக்களை குழப்ப முயற்சிக்கிறார். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக எத்தனை பொய்கள் சொன்னாலும், இந்த முறை திமுக தோற்று ஓடப்போவது உறுதி” என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் குறிப்பிட்டு பேசிய அவர், “கடந்த 30 ஆண்டுகளாக ஒரே எம்.எல்.ஏ.வாக இருந்த சக்கரபாணியின் ஆட்சியில் விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையில் இருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு மட்டும் ரேஷன் கடைகளில் இருந்து 900 டன் அரிசி கடத்தப்பட்டது. தெரிந்தே இவ்வளவு பெரிய கடத்தல் நடக்கிறது. இந்தக் கையாலாகாத ஆட்சியை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும். தமிழகம் வளரட்டும். தமிழகத்தை தீய சக்தியான திமுகவிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும்” என்ற கொள்கையுடன் தே.ஜ.கூட்டணி செயல்பட்டு வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகருக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்... முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆவேசம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share