×
 

#BREAKING அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...!

இடைவிடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

தென் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த மழை நேற்று அதிகாலை முதல் பலத்த மழையாக பெய்தது.குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளின் நீர்வரத்து பகுதி மற்றும் களியல், திற்பரப்பு, குலசேகரம், பாலமோர், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் கன மழை நீடித்தது. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம்,உட்பட மாவட்டம் முழுவதும் மழையானது இன்றும் நீடித்து வருகிறது.

இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 182  மி. மீ மழை பதிவாகியுள்ளது. சுருளோடு பகுதியில்  160.4 மி. மீ மழையும்,சிற்றாறு 1 அணை பகுதியில் 150.4 மி.மீட்டரும் பேச்சிப்பாறை  அணைப்பகுதியில் 115 மி.மீட்டரும் பெருஞ்சாணி  அணை பகுதியில் 128 மில்லி மீட்டரும் சிற்றாறு 2 அணை பகுதியில் 82 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களான தடிகாரகோணம், வாழயத்து வயல், கீரிப்பாறை, காளிகேசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே மிக கனமழை பெய்து வருகிறது.  பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு வந்தால் கத்துக்கொடுக்கிறோம்... எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் வகுப்பெடுத்த செல்வப்பெருந்தகை...!

கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு துவங்கிய  மழை தொடர்ந்து இன்னும் நீடித்து வருகிறது. நாகர்கோவில், திற்பரப்பு,சுருளோடு, பேச்சிப்பாறை, குழித்துறை, அடையாமடை, மாம்பழத்துறையாறு உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ராமதாஸ் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... ஜி.கே.மணிக்கு நேரடியாக சவால் விட்ட திலகபாமா...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share