×
 

துர்கா ஸ்டாலினின் பிள்ளையார்பட்டி சென்டிமெண்ட்! குன்றக்குடியில் படிபூஜை! முக்கிய கோயில்களில் வழிபாடு!

கணவர் மீண்டும் முதல்வராக வர வேண்டி பிரசித்தி பெற்ற கோயில்களில் வழிபாடு செய்ய துர்கா திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பரபரப்பு நிலவும் நேரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் துணைவியார் துர்கா ஸ்டாலின் ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார். கணவர் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய துர்கா திட்டமிட்டுள்ளார். இந்த பயணம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று (பிப்.20) உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காரைக்குடியில் இரவு தங்கினார். இன்று (பிப்.21) காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொப்புடையம்மன் கோயிலில் உறவினர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். அமைச்சர் பெரியகருப்பனும் இந்த வழிபாட்டில் உடன் சென்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து குன்றக்குடி சென்ற துர்கா ஸ்டாலினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வரவேற்றார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நினைவு மண்டபத்தை பார்வையிட்ட பிறகு, மலைக்கோயிலான சண்முகநாத பெருமான் கோயிலுக்கு சென்றார். 

இதையும் படிங்க: உதயநிதி ப்ரண்டுனா இப்பிடியா? துரைமுருகன் நாற்காலியில் மகேஷ்! திமுக-வில் மூத்த அமைச்சர்கள் அதிர்ச்சி!

படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். மலையேறி மூலவர் சண்முகநாத பெருமானை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

குன்றக்குடி முருகன் கோயிலில் படி பூஜை செய்தால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களிடையே நிலவும் ஐதீகம். இதனால் துர்கா ஸ்டாலினின் இந்த வழிபாடு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்று மாலை 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இந்த பயணம் மேலும் சில பிரசித்தி பெற்ற கோயில்களை உள்ளடக்கி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நேரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தரப்பில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஸ்டாலினை வெளிப்படையாக விமர்சித்து வந்த நிலையில், இன்று டி.ஆர். பாலு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தேமுதிக இணைந்த பிறகு கூட்டணி விரிவடைந்துள்ளது.

துர்கா ஸ்டாலினின் இந்த ஆன்மீக பயணம் அரசியல் – ஆன்மீகம் இணைந்த புதிய செய்தியாக மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 

இதையும் படிங்க: ஆயிரம் விளக்கில் களம் இறங்கும் மு.க.ஸ்டாலின்?! கொளத்தூர் இல்லையா? உதயநிதி, கனிமொழி களம் காண்பது எங்கே?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share