உதயநிதி ப்ரண்டுனா இப்பிடியா? துரைமுருகன் நாற்காலியில் மகேஷ்! திமுக-வில் மூத்த அமைச்சர்கள் அதிர்ச்சி!
நேற்று, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்த பின்,அமைச்சர் துரைமுருகன் இருக்கையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வந்து அமர்ந்தார்.
தமிழக சட்டசபையில் பாரம்பரிய நடைமுறைகள் மிக முக்கியமானவை. சபாநாயகர் இருக்கையின் வலது புறத்தில் ஆளும் கட்சி, இடது புறத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்வது வழக்கம். ஆளும் திமுக வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் அமர்கின்றனர்.
தமிழக சட்டசபையில் பாரம்பரிய நடைமுறைகள் மிக முக்கியமானவை. சபாநாயகர் இருக்கையின் வலது புறத்தில் ஆளும் கட்சி, இடது புறத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்வது வழக்கம். ஆளும் திமுக வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் அமர்கின்றனர்.
நேற்று (பிப்.20, 2026) சட்டசபை விவாதத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் பன்னீர்செல்வம் பதிலுரை அளித்த பிறகு, துரைமுருகன் இருக்கையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போய் அமர்ந்தார். அடுத்த ஒரு மணி நேரம் திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினர். முதல்வருக்கு அருகில் அமர்ந்த மகேஷ் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: எவ்வளவு விமர்சனம் வச்சாலும் நாங்கதான் ஜெயிப்போம்! விஜய் சொன்ன திமுக குறள்!! அன்பில் மகேஷ் விளக்கம்!
முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதை கவனித்த மூத்த அமைச்சர்கள் எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்த்தனர். எதிர் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டணி கட்சி உறுப்பினர்களும் இந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சட்டசபை என்றால் பாரம்பரியம், ஒழுங்கு, சீனியாரிட்டி ஆகியவை மிக முக்கியம். சபை முன்னவர் இருக்கையில் ஜூனியர் அமைச்சர் அமர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவுக்குள் உள்ள உள் பூசல்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மகேஷ் அமைச்சராக இருந்தாலும், சீனியாரிட்டி அடிப்படையில் அமைச்சர்கள் அமரும் வரிசையில் இடம் இல்லை. இந்த சம்பவம் சட்டசபைக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது.
துரைமுருகன் விரைவில் குணமடைந்து சபைக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர்கள் விரும்புகின்றனர். இல்லையெனில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ வாய்ப்பு உள்ளது. திமுக அரசின் ஒழுங்கு மற்றும் ஒற்றுமை குறித்து இப்போது கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பதற்றம்... அப்பல்லோ மருத்துவமனை விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்....!