முதல்வர் விஜய்தான் களவாணி..! “இரவல் ஆட்சி”..! சிதைந்து போன திமுக… EPS கடும் தாக்கு..!!
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக என்று பெருமிதம் தெரிவித்தார். அதிமுகவின் கோட்டையாக சேலம் மாவட்டம் விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது தேவையற்றது என்றும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் விளக்கம் கொடுத்தார்.
தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் விமர்சனம் செய்துள்ளார். அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பல திட்டங்களைக் கொண்டு வந்து அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றியது என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய் தான் களவாணி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கி பேசினார். அதிமுக எம்எல்ஏக்களாக இருந்தவர்களை தமிழக வெற்றி கழகம் களவாடியது என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசின் திட்டங்களால் மக்களுக்கு நன்மை இல்லை என்றும் அப்போது குறிப்பிட்டு பேசினார். கரூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடியே இப்படி பண்ணிட்டாரே..! நான் என்ன தப்பு பண்ணேன்..? குமுறும் அதிமுக ஒன்றிய செயலாளர்..!!
கூட்டணி கட்சி தலைவர்களை அரவணைத்தால் தமிழக வெற்றி கழக அரசு நீடிக்கும் என்றும் பேசினார். தமிழ்நாட்டில் இரவல் ஆட்சி நடப்பதாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிக்கொண்டு தான் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறார் என்று தெரிவித்தார். திமுக எதிர்ப்பில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபத்தில் இருப்பதாகவும் சிதைந்து போன திமுக கூட்டணியில் கொள்கை இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: யாரோட அழுத்தமும் இல்ல.. சுயவிருப்பத்தில்தான் தவெக-வில் இணைந்தோம்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி!