×
 

அதிமுக கூட்டத்தைக் கலைக்கவே ஆம்புலன்ஸ் விடுறாங்க... திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!

எந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் சாலை வழியாக அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்லதான் செய்யும்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் புரட்சி தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஒரு தொகுதிகள் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆம்புலன்சை நிறுத்தி அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநரை மிரட்டி, அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறியுங்கள், அந்த வாகனத்தின் ஓட்டுநரை வாகனத்தில் இருந்து கீழே இறக்குங்கள் எனக்கூறியிருந்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்ட சில இடங்களில் அவசர ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஓட்டுநர்கள் மீதும் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். எந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போதும் சாலை வழியாக அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்லதான் செய்யும். எனவே, தங்களுடைய வசதிக்காக அவசர உறுதியை நிறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இதுகுறித்து நேற்று நடைபெற்ற திமுக கூட்டம் ஒன்றில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலைகளில் அவசர தேவைக்காக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தி வாக்குவாதம் செய்யும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக என்ற கட்சி தற்போது ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளது. பாஜகவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவசர பிரிவில் அனுமதிக்கப்டும். கடைசியில் உங்களை காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் மு க ஸ்டாலின் தான் வருவார் என விமர்சித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம்; மணமக்களுக்கு பட்டு சேலை, வேஷ்டி - அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்...!

அதற்கு இன்று ஆனைமலையில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். ஆம்புலன்ஸ் செல்ல வழி விடலை என்கிறார் உதயநிதி, 142 கூட்டம் பேசுகிறேன். 

பேசி 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வருது. தொடர்ந்து 20 கூட்டங்களில் வந்ததால்  சந்தேகம் வந்தது. அதனால் வாகனத்தை நிறுத்தி சோதித்தோம், உண்மை தெரிந்தது.  வேகமாக வரும் ஆம்புலைன்ஸ் யார் மீதாவது மோதினால் என்ன செய்வது. வேண்டுமென்றே கூட்டத்தை கலைக்கவே ஆம்புலன்ஸ் அனுப்புகிறார்கள். கூட்டத்தை பார்க்க பொருத்துக்கொள்ள முடியவில்லை.
 

இதையும் படிங்க: “சொன்னா புரியாதா? இத்தோட நிறுத்திக்கோங்க..” - விவசாயிடம் கடுகடுத்த இபிஎஸ்- கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share