×
 

எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!

தேனி, ஆண்டிபட்டியில் பிரசாரம் செய்ய தினகரன் சென்றிருந்தார். அப்போது பழனிசாமி சோபாவில் இருக்க, அவருக்கு அருகில் பிளாஸ்டிக் சேரில் தினகரன் உட்கார்ந்திருந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுக - அமமுக இடையே உருவாகியுள்ள கூட்டணி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பு எலியும் பூனையுமாக இருந்த இரு தலைவர்களான அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியும், அமமுக பொதுச்செயலர் டி.டி. வினகரனும், பாஜகவின் முயற்சியால் ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளனர்.

இந்த கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பழனிசாமியும் தினகரனும் ஒரே பிரசார வாகனத்தில் சேர்ந்து வலம் வரத் தொடங்கியுள்ளனர். இந்த காட்சி திமுக கூட்டணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. பழனிசாமி சோபாவில் அமர்ந்திருக்க, தினகரன் அவருக்கு அருகில் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்திருந்த புகைப்படம் வெளியானது. இந்த படத்தை வைத்து திமுகவினர் சமூக வலைதளங்களில் தினகரன் அவமதிக்கப்பட்டதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை - வேலுமணி திடீர் சந்திப்பு!! கொங்கு மண்டலத்தில் திமுகவை வீழ்த்த திட்டம்!

இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: “ஆண்டிபட்டி அதிமுக நிர்வாகியின் வீட்டில் தினகரன் முன்பே வந்து அமர்ந்திருந்தார். பின்னர் பழனிசாமி வந்தபோது, அதிமுக நிர்வாகிகள் சோபாவில் இருந்து எழுந்து இடம் கொடுத்தனர். தனி நாற்காலி கொண்டு வருவதற்குள் பழனிசாமி சோபாவில் அமர்ந்துவிட்டார். இதில் தினகரன் அவமதிக்கப்பட்டதாக சொல்வது முழுக்க தவறான தகவல். இது தேர்தல் ஆதாயத்துக்காக திமுகவினர் பரப்பும் பொய் பிரசாரம்” என்றனர்.

இரு தலைவர்களும் இணைந்து பிரசாரம் செய்வது அதிமுக - அமமுக கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். முன்பு ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்த இரு தரப்பினரும் இப்போது ஒரே மேடையில் நின்று பிரசாரம் செய்வது தமிழக அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

திமுகவினரின் விமர்சனத்துக்கு அமமுக தரப்பு உறுதியாக பதிலளித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. கூட்டணி உறுதியாக இருப்பதாகவும், எந்த உள்ளக பிரச்சினையும் இல்லை என்றும் இரு கட்சி நிர்வாகிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டணி தமிழக சட்டமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share